அந்த வகையில் நடிகர்களில் சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ் போன்றவர்கள் டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினியின் மக்கள் மக்கள் மன்றம் மூலம் 50 லட்ச ரூபாய் நிவாரண பொருட்களை அளித்திருந்தார். ஆனால், அந்த நிவாரண பொருட்களில் ரஜினியின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
— அனிதா ♡ (@anithatalks) November 20, 2018எந்த வித பலனையும் எதிர்பாராமல் பலரும் மக்களுக்கு உதவி செய்து வரும் இந்த தருணத்தில், அவசரமாக செய்ய வேண்டிய உதவியை இப்படி ஸ்டிக்கர் அடித்து கொள்ள நேரம் எடுத்துக்கொண்டு ரஜினி ரசிகர்கள் சிலர் செய்துள்ள இந்த உதவி வெறும் விளம்பரமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல தமிழகத்திற்கு இதுவரை ஒரு சில அரசியல் கட்சிகள் தான் மக்களிடம் விளம்பரத்தை தேடுவதற்காக இலவச பொருட்களில் தங்கள் கட்சி தலைவரின் ஸ்டிக்கரை ஒட்டி விளம்பரம் தேடிக்கொண்டனர். ஆனால், ரஜினியும் இதே முறையை பின்பற்றுகிறாரா அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ரஜினிக்கு தெரியாதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





