சினிமா காட்சியை மிஞ்சும் அளவிற்கு நடு ரோட்டில் கோபமாக திட்டிய சூர்யா ! வீடியோ உள்ளே

0
6322
Surya

தென்னிந்திய சினிமாவின் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் சூரியா. இந்த பொங்கலுக்கு அவர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆந்திராவிலும் சூர்யாவிற்கு ரசிகர்கள் உள்ளதால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் வெளியிடப்பட்டது.

Suriya

இதனால் பொங்கல் அன்று ஆந்திராவில் படத்தின் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை பார்க்க ஆந்திரா சென்றிருந்தார் சூரியா. ஒரு தியேட்டருக்கு சென்ற போது அங்கு அவரது ரசிகர் கூட்டம் அதிகமானதால் கேட் ஏறி குதித்து வர வேண்டியதாயிற்று.

அதன் பின்னர் சூரிய வருகையை முன்னிட்டு ஆந்திராவில் உள்ள ரசிகர்கள் சூர்யாவிற்காக பைக் பேரணி நடத்தினார். இந்த பைக் பேரணியில் பலர் ஹெல்மெட் போடாமல் வந்திருந்தனர். மேலும், ஒரு ரசிகரின் பைக் எதிர்பாராத விதமாக சூர்யாவின் காரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் டென்ஷன் ஆனா சூரியா காரை விற்று இறங்கி நடுரோட்டில் ஏன் இப்டி பண்றிங்க? ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டுங்க என அவர்களை கடுமையாக திட்டினாராம். அதிர்ஷ்டவசமாக அவரது காரில் மோதிய ரசிகருக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை.