ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து வாய் திறக்காத விஜய் – தடை நீக்கம் குறித்து சூர்யா சொன்ன விஷயம்.

0
1877
Vijay
- Advertisement -

ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து நடிகர் சூர்யா பதிவிட்டு டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

-விளம்பரம்-

தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதி இருந்தது. இதனை அடுத்து இளைஞர்கள் உட்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இது தமிழகத்தை மட்டும் இல்லாமல் இந்தியாவிலேயே பெரும் அதிர்வலையையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது. பின் மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்திருந்தது.

- Advertisement -

ஜல்லிக்கட்டு பிரச்சனை:

மேலும், அந்த அவசரத் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற தொடங்கியது. இதனிடையே ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரி அந்த அவசர சட்டத்திற்கு பீட்டா என்ற விலங்குகள் நலவாரிய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. பின் உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:

இந்நிலையில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று புது சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இதனால் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்றும் இனிமேல் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்றும் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இது தமிழக மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கர்நாடகாவில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் கம்பாலா போட்டிக்கும் தடையை நீக்கி இருக்கிறது.

-விளம்பரம்-

சூர்யா டீவ்ட்:

இதனை அடுத்து பலருமே உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடி வருகிறார்கள். ஆனால், விஜய் இதுவரை இதுகுறித்து எதுவும் வாய் திறக்காமல் இருந்துவருகிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவும் இதற்கு ட்விட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஜல்லிக்கட்டு நம் கலாச்சாவாடிரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. கன்னடாவின் கம்பளாவிற்கும் அனுமதி அளித்திருப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. இரு மாநில அரசுக்கும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார்.

சூர்யா திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்திருந்த ஜெய் பீம் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனை அடுத்து சூர்யா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து வாடிவாசல் என்ற படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement