சொந்தமாக தயாரித்த படம் இறக்கும் வரை வெளிவரவில்லை, வாரிசு குறித்த ஏக்கம், துக்கத்தில் இறப்பு – தவக்களையின் சோக கதை.

0
1199
Thavakkalai
- Advertisement -

முந்தானை முடிச்சு தவக்களை குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் கே பாக்யராஜூம் ஒருவர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். இவர் சினிமா இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். அந்த வகையில் 1983 ஆம் ஆண்டு இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தவக்களை, தீபா, கே.கே.செளந்தர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் அப்போதே திரையரங்களில் 100 இந்த மேல் ஓடி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. மேலும், இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தவக்களை சிட்டிபாபு.

- Advertisement -

தவக்களை சினிமா பயணம்:

இவர் முதலில் பயணங்கள் முடிவதில்லை, ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா போன்ற பாடல்களில் சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தார். இதற்குப் பிறகு காமெடி நடிகர் குண்டு மனிதன் தவக்கலையை பாக்யராஜ் இடம் அறிமுகம் செய்து வைத்திருந்தார். அதற்கு பிறகு தான் முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜ் நடிக்க வைத்தார். இந்த படத்தில் தவக்களை நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. குறிப்பாக, நான் அறிந்த என்ற பாடலில் அவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது.

தவக்களை திரைப்பயணம்:

முந்தானை முடிச்சு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தவக்களைக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. அதன் பின் இவர் ஓசை, நீங்கள் கேட்டவை, காக்கி சட்டை, ஆண்பாவம், என் ரத்தத்தின் ரத்தமே, பாட்டு வாத்தியார் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இவர் 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

தவக்களை தயாரித்த படம்:

அதுமட்டுமில்லாமல் இவர் தெலுங்கில் மோகன் பாபு ஹீரோவாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். பின் ஒரு கட்டத்தில் தவக்களைக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியுடன் இவர் சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தார். பின் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மண்ணில் இந்த காதல் என்ற படத்தை தயாரித்தார். அந்த படம் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே இவருடைய நண்பர்கள் இவரை கழட்டி விட்டு சென்று விட்டார்கள். இதனால் முழு பொறுப்பும் தவக்களை மீது தான் விழுந்தது.

தவக்களை இறப்பு:

ஒரு வழியாக அந்த படத்தை கடன் வாங்கி தயாரிதார்.. ஆனால், கடைசி வரை அந்த படத்தை அவரால் வெளியிடமுடையவில்லை. கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த பணத்தை மொத்தத்தையும் அவர் இழந்து விட்டார் என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் வடபழனியில் தவக்களை ஆசை ஆசையாக வாங்கிய வீட்டையும் கூட விற்று விட்டு வாடகை வீட்டில் வசித்து இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் கலைக்குழு ஒன்றை நடத்தி சம்பாதித்து வந்தார். பின் கடந்த 2017 பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார். கேரளாவில் மலையாளப் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டு  வீடு திரும்பியவர், அதிகாலை எழவே இல்லை. 42 வயதான தவக்களைக்கு, தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்திருக்கிறது.   தவக்களைக்கு, போதுமணி என்ற மனைவி இருக்கிறார். ‘வாரிசு இல்லை என்ற ஏக்கம் மட்டும் கடைசி வரை அவருக்கு இருந்தது”

Advertisement