‘மாமன்னன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரில் முதலில் இருந்த வடிவேலுவின் பெயர் – அவரே கொடுத்த விளக்கம்.

0
476
vadivelu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் சினிமாவுக்குள் வந்தார். பின்னர் இயக்குனர் ராமிடம் தான் இவர் உதவி இயக்குனராக பணியாற்றினார். மேலும், ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் கூட மாரி செல்வராஜ் ஒரு சிறு காட்சியில் நடித்து இருப்பார். பிறகு பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இவரின் முதல் படமே மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் நடிகர் வடிவேலுவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் வடிவேல் பெயரை முதல் பெயராக எழுதி வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

மாமன்னன் படம் பற்றிய தகவல்:

பிறகு ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க இருக்கிறது. தற்போது சோஷியல் மீடியாவில் இந்த படத்தின் போஸ்டர் குறித்து பேச்சு தான் அதிகமாக வைரலாகி கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் வடிவேலு பேட்டி எடுக்கப்பட்டது. அதில் வடிவேலு கூறி இருப்பது, நான் மைசூரில் பட சூட்டிங்கில் இருக்கேன். மாமன்னன் பட போஸ்டரை இன்னும் நான் பார்க்கவில்லை.

மாமன்னன் படம் பற்றி வடிவேலு சொன்னது:

நீங்கள் சொல்லித் தான் என்னுடைய பெயர் முதலாவதாக இடம் பெற்றுள்ளது தெரிகிறது. இதை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இதுக்காக மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு தான் நன்றி சொல்லனும். இது எனக்கு கிடைத்த கவுரமாக நான் பார்க்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. மைசூரில் ஷூட்டிங் முடித்துவிட்டு சேலம் போகிறேன். சீக்கிரம் சென்னைக்கு வருவேன் என்று கூறினார். இதை தொடர்ந்து மாமன்னன் படத்தில் காமெடியை தாண்டி ஏமோஷனல் ஆகவும் உங்களுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்கிறார்களே? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
என்று கேட்டதற்கு,

-விளம்பரம்-

வடிவேலுவின் திரைப்பயணம்:

இது குறித்து நீங்கள் இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும் என்று வடிவேலு தன்னுடைய பேட்டியை முடித்துக்கொண்டார். மேலும், இந்த படத்தின் சூட்டிங் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்றும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் காமெடியில் கிங்காக திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார். பின் வடிவேலு 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார். இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையேயான பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு விதித்தது.

வடிவேலு நடிக்கும் படங்கள்:

இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது இவர் Lyca நிறுவனத்துடன் பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். அதில் முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து வடிவேல் அவர்கள் பல படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் வடிவேலுவை மீண்டும் திரையில் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement