‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – விஜய்க்கு துணை நிற்கும் திரையுலகம், நயனை கண்டுகொள்ளாதது ஏன்?

0
527
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராகவும் கலக்கி கொண்டிருக்கிறார். நயன்தாரா இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்து இருக்கிறார். இது நயன்தாராவின் 75வது படமாகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

- Advertisement -

அன்னபூரணி படம்:

சமீபத்தில் தான் இந்த படம் netflix தளத்திலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படம் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் விதமாக இருப்பதாகவும் மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும், படத்தில் ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்றும், அர்ச்சகர் மகளான கதாநாயகி நமாஸ் செய்வது போல காட்சிகளும் வந்திருக்கும். இது இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதால் படத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.

அன்னபூரணி படத்தின் மீது புகார்:

இதனை அடுத்து போலீசார் அன்னபூரணி படத்தின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்திருக்கிறது. இதனை அடுத்து இதற்கு விளக்கம் கொடுத்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதன் பின் இந்த படத்தை ஓடிடி தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறது. இப்படி நயன்தாரா உடைய அன்னபூரணி படம் தான் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்காக நடிகை நயன்தாரா மன்னிப்பும் கேட்டிருந்தார். பின் இது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டு இருந்தார். தற்போது இந்த ஒட்டுமொத்த சர்ச்சையும்முடிவுக்கு வந்திருக்கிறது.

-விளம்பரம்-

ஆதரவு கொடுத்த நபர்கள்:

மேலும், நடிகை நயன்தாராவிற்கு ஆதரவாக இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் தான் துணை நின்றார். அவர், சென்சார் செய்யப்பட்ட திரைப்படத்திற்கு ஓடிடி நிறுவனம் இப்படி செய்யக்கூடாது, அது தவறு என்று கூறி இருந்தார். பின் ரசிகர்களும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஆனால், மற்ற திரைஉலகை சேர்ந்தவர்கள் யாருமே நயன்தாராவிற்கு துணை நிற்கவில்லை. இது ரொம்ப கஷ்டமான விஷயம்தான். இதே போல் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தின் போது ஜிஎஸ்டி குறித்தும், கோவில்களுக்கு பதிலாக மருத்துவமனைகள் கட்டலாம் என்று விஜய் பேசி இருந்த வசனம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. இதற்கு வடக்கில் இருந்து பெரும் எதிர்ப்புகள் எல்லாம் வந்திருந்தது.

நயனுக்கு ஆதரவு தெரிவிக்காத காரணம்:

அந்த நேரத்தில் ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களும், திரை உலகை சேர்ந்த பல பேரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்கள். ஆனால், தற்போது நயன்தாரா படத்தின் பிரச்சினையின் போது யாருமே ஆதரவுக்கு தெரிவிக்கவில்லை. இதற்கு காரணம், நயன்தாரா தன்னுடைய எந்த படத்தின் பிரமோஷன், படங்கள் தொடர்பான விழாக்கள் எதிலுமே கலந்து கொள்ளவில்லை. இதனால் தான் நடிகர்களும் நயன்தாரா உடைய பிரச்சினையை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், விஜய் அப்படி இல்லை. தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் வரும் படத்தை மட்டும் தான் நயன் கண்டுகொள்கிறார். இந்த காரணத்தினால் தான் பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தும், நயன்தாராவை கண்டு கொள்ளாமலும் இருக்கிறார்கள்.

Advertisement