ரூ.300 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் பிரபல நடிகர் ! என்ன படம், யார் தெரியுமா !

0
1979

அமெரிக்க தயாரிப்பு நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கும் சரித்திரப்படம் ஒன்றில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார்.
chiyaan-vikramசரித்திரப் பின்னணி கொண்ட அந்த படத்துக்கு ’மஹாவீர் கர்ணா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் பீரியட் படமாக வந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற என்னு நிண்டே மொய்தீன்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இந்த படத்தை இயக்குகிறார்.

நியூயார்க்கைச் சேர்ந்த யுனைடெட் பிலிம் கிங்டம் தயாரிப்பு நிறுவனம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாரிக்க இருக்கும் படத்தில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் ’சாமி-2’, விஜய் சந்தரின் ’ஸ்கெட்ச்’ மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ’துருவ நட்சத்திரம்’ என பிஸியாக விக்ரம், இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
Vikramமஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் மட்டுமே இந்த படம் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.