உங்க வாகை சூடவா படத்துக்கு Sk தொகுப்பாளரா இருந்தார், இப்போ அவர் பயங்கரமாக வளந்துட்டார் ஆனா நீங்க – Vj கேட்ட கேள்வியால் கடுப்பான விமல்.

0
872
vimel
- Advertisement -

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகர், நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் தான். அந்த வகையில் வந்தவர் தான் நடிகர் விமல். சின்னத்திரை தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் விமலும் ஒருவர். இவர் படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். சிறுவயதிலேயே விமல் தன்னுடைய படிப்பை நிறுத்தி சென்னைக்கு வந்தவர். பின் கூத்துப்பட்டறை என்னும் நாடகக் குழுவில் சேர்ந்து தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். இதன் மூலம் இவர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பிறகு தன்னுடைய கடும் உழைப்பினால் கதாநாயகன் ஆனார்.

-விளம்பரம்-

மேலும், இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். இந்த களவாணி படத்தின் மூலம் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது. அதனை தொடர்ந்து இவர் தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, மஞ்சப்பை, கதை கில்லாடி வசனம் இயக்கம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

விமல் திரைப்பயணம்:

பொதுவாகவே இவருடைய படங்கள் அனைத்தும் குறைவான பட்ஜெட்டில் தான் இருக்கும். மேலும், இவர் சினிமா உலகில் ஹீரோ ஆவதற்கு முன் பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். விஜய்யின் கில்லி, குருவி, அஜித்குமார் கிரீடம் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு தான் இவர் படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

விமல் நடித்து இருக்கும் படம்:

இப்படி இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரால் சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. மேலும், களவாணி படம் போல் ஒரு வெற்றி படத்திற்காக விமல் போராடிக் கொண்டிருக்கின்றார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் விலங்கு. இந்த படம் வெளியாகி சில நாட்கள் தான் ஆனது.

-விளம்பரம்-

விமல் அளித்த பேட்டி:

இதனை அடுத்து இந்தப் படம் குறித்து சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் தொகுப்பாளர் ஒருவர், வாகை சூடவா படத்தில் உங்கள் படத்திற்கு தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவர் உங்கள் கூடவே நடித்து இன்று பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார். ஆனால், நீங்கள் அப்படியே இந்த இடத்தில் இருப்பதற்கு என்ன காரணம்? என்று கேட்டிருக்கிறார். உடனே கடுப்பான விமல் சிவகார்த்திகேயன் கூட எல்லாம் என்ன கம்பர் பண்ணாதீங்க.

சிவகார்த்திகேயன் பற்றி விமல் சொன்னது:

அவங்க அவங்களுக்கு ஒரு பாதை இருக்கிறது. அதில் போய்க் கொண்டிருக்கிறோம். உங்க வேலையை நீங்க சரியா பாருங்க, என் வேலையை நான் சரியா பார்ப்பேன் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், சிவகார்த்திகேயனும், விமலும் சேர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சேர்ந்து நடித்து இருந்தார்கள். இந்த படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், விமலுக்கு அமையவில்லை என்றுதான் சொல்லணும்.

Advertisement