கில்லி படத்திற்கு முன்பாகவே சன் டிவி சீரியலில் நடித்துள்ள விமல். வீடியோ இதோ.

0
5430
vimal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் விமலும் ஒருவர். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பொதுவாகவே இவருடைய படங்கள் அனைத்தும் குறைவான பட்ஜெட்டில் தான் இருக்கும். பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். இந்த களவாணி படத்தின் மூலம் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து நடிகர் விமல் தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, மஞ்சப்பை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் களவாணி 2 படம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விமல் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இந்த படத்தில் விஜய்யின் நண்பராக நடித்திருந்தார் விமல்.

ஆனால், சினிமாவில் முன்பே நடிகர் விமல், சீரியலில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. நடிகர் விமல் ஆரம்பத்தில் கூத்துப்பட்டறையில் இருந்த போது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தார். அப்போது கிடைத்த வாய்ப்பு தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி தொடரின் வாய்ப்பு. அந்த தொடரில் நடிகர் விமல் நடித்த காட்சியின் வீடியோ இதோ.

-விளம்பரம்-
Advertisement