விவாகரத்துக்கு பின் முதன் முறையாக சத்குருவை சந்தித்த சமந்தா – வைரலாகும் புகைப்படம் (ஓ, இதான் விஷயமா )

0
199
- Advertisement -

ஈஷா சத்குரு நிகழ்ச்சியில் சமந்தா கலந்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
ஒரு பக்கஆடை இல்லாமல் இருக்கும் சமந்தா.! இப்படி கூட டிரஸ் இருக்கா.! - Tamil Behind  Talkies

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். பின் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

- Advertisement -

சமந்தா நடித்த படங்கள்:

இருந்தாலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். அதனை தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படத்திலும் குத்தாட்டம் போட இருக்கிறார். பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்தார்.

சமந்தா நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் கதிஜா பாத்திரத்தில் நடித்த சமந்தாவுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் சாகுந்தலம், யசோதா, திரில்லர் கதை சமந்தா கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஈஷா சத்குருவை சமந்தா சந்தித்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகளும் சத்குருவின் பக்கதர்களாக தான் இருந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சத்குருவின் பக்தர்கள்:

அதிலும் குறிப்பாக தமன்னா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங்,சமந்தா என பல்வேறு நடிகைகள் சத்குருவின் மிகுந்த பக்தைகள் தான். குறிப்பாக இவர்கள் அனைவரும் சிவராத்திரி பூஜைகளில் தவறாமல் விசிட் அடித்துவிடுவார்கள். அதேபோல் நடிகை சமந்தா சிவராத்திரியில் ஈஷா யோகாவில் சத்குரு நடத்தும் நிகழ்ச்சிக்கு செல்வது வழக்கம். கடந்த ஆண்டு நடைபெற்ற சிவராத்திரி கொண்டாட்டத்தில் கூட சமந்தா கலந்து கொண்டார். அந்த வீடியோவில் சமந்தாவை பார்த்த சத்குரு ஏதோ பேசிவிட்டு அவரை செல்லமாக கில்லி இருந்தார்.

சத்குருவை சந்தித்த சமந்தா:

பின்னர் பக்தர்களோடு பக்தர்களாக சமந்தா ஆடி பாடி மகிழ்ந்து இருந்தார். ஆனால், இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொள்ளவில்லை. அந்த சமயத்தில் தான் சமந்தாவிற்கு விவாகரத்து நடைபெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் விவாகரத்துக்கு பின்னர் முதன் முறையாக சத்குருவை சந்தித்து உள்ளார் சமந்தா. அதாவது சத்குருவின் Save Soil நிகழ்ச்சி தொடர்பாக சமந்தா சந்தித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்து இருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement