படங்களில் தான் சாது நிஜத்தில் சவுண்ட் சரோஜா ரேஞ்சுக்கு சண்டைப்பட்டுள்ள சரண்யா. வெளியான CCTV காட்சி

0
312
- Advertisement -

கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது பக்கத்து வீட்டுப் பெண் போலீஸில் அளித்து இருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சரண்யா பொன்வண்ணன். இவர் சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் தான் குடியிருக்கிறார். இவருடைய வீட்டுக்கு பக்கத்தில் ஸ்ரீதேவி என்பவர் இருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் ஸ்ரீதேவி தன்னுடைய கேட்டை திறந்த போது சரண்யாவின் காரை உரசுவது போல் சென்றிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சரண்யா அவருடன் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த கேட் 20 அடி நீளம் இருக்கிறது. கேட்டை திறந்த உடனே அப்போது வெளியில் இருந்த சரண்யாவின் காரை ஸ்ரீதேவியின் இரும்பு கேட் வேகமாக நகர்ந்து உரசுவது போல் வந்திருக்கிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

சரண்யா மீது புகார்:

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சரண்யா குடும்பத்தினர் ஸ்ரீதேவி மீது மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இதனை அடுத்து சரண்யா குடும்பத்தினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஸ்ரீதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சரண்யா தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து தன்னை மிரட்டியதாக சிசிவி காட்சி ஆதாரங்களையும் புகாரில் இணைத்து இருக்கிறார் ஸ்ரீதேவி. இதை அடுத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு இருக்கிறது.

புகாருக்கு காரணம்:

அப்போது சரண்யா அவர்கள் ஸ்ரீதேவி மீது புகார் அளித்திருக்கிறார்கள். தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஇருக்கும் நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் உலகநாயகன் கமலுக்கே ஜோடியாக நடித்தவர். நாயகன், அஞ்சலி என பல ஹிட் படங்களில் சரண்யா நடித்து இருக்கிறார். தற்போது அனைத்து படங்களிலும் அம்மா கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார்.

-விளம்பரம்-

சரண்யா குறித்த தகவல்:

தற்போது உள்ள பெரும்பாலான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றால் இயக்குனர்களின் முதல் சாய்ஸ் இவராக தான் இருக்கும். மேலும், தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது வாங்கியுள்ளார் சரண்யா பொன்வண்ணன். எம்டன் மகன், வேலையில்லா பட்டதாரி, களவாணி, முத்துக்கு முத்தாக, மகளிர் மட்டும், ஒருகல் ஒருகண்ணாடி, கொடி என பல படங்களில் அம்மாவாக நடித்து தன் அபார திறமையை நிரூபித்துள்ளார் சரண்யா.

சரண்யா குடும்பம்:

இவரது நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார். தற்போதும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும், விருகம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் ஒரு பேஷன் டிசைனிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார் சரண்யா. படங்களில் நடித்துக்கொண்டே இந்த பேஷன் டிசைனிங் ஸ்கூலில் 300 பேருக்கு பேஷன் டிசைனிங் மற்றும் ஸ்டிச்சிங் சொல்லி கொடுத்து வருகிறார். இதனிடையே இவர் தன்னுடன் நடித்த பொன்வண்ணனை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisement