ரமணா பட குழந்தை நட்சத்திரம் கல்யாணிக்கு குழந்தை பிறந்தது..! புகைப்படம் இதோ.!

0
293
kalyani

தமிழில் நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான “ஜெயம்” படத்தில் நடிகை சதாவிற்கு தங்கையாக கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பூர்ணிதா. அந்த கதாபாத்திரம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானதால் பின்னர் இவரது பூர்ணிதா என்ற பெயரை மறந்து கல்யாணி என்றே அழைக்கபட்டார்.

ஜெயம் படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்திலும் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார் கல்யாணி. திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த போதே சீரியலில் குழந்தை கதாபாத்திரமாகவும் நடித்திருந்தார். பின்னர் சின்னத்திரையில் செட்டில் ஆன கல்யாணி விஜய் டிவியில் தொகுப்பாளியாகவும் பணியாற்றி வந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வந்த கல்யாணி, கடந்த ஆண்டு சின்னத்திரையில் இருந்தும் விலகினார்.

கல்யாணி கர்ப்பமாக இருந்ததால் தொகுப்பாளினி பணியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சென்ற மாதம் ஆகஸ்ட் 20 கல்யாணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில் முதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை கல்யாணி.