மஞ்சுமேல் பாய்ஸ் பட நடிகரை மணக்க இருக்கும் பீஸ்ட், டாடா பட நடிகை அபர்ணா தாஸ்.

0
827
- Advertisement -

விஜய் பட நடிகை அபர்ணா தாசிற்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் அமர்ணா தாஸ். இவர் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகியிருந்த Njan Prakashan என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு இவர் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிருந்த பீஸ்ட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியாகியிருந்த டாடா படத்தில் ஹீரோயினியாக அபர்ணா தாஸ் நடித்திருந்தார். இப்படத்தை கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார். படத்தில் கவின், பாக்யராஜ், ஐஸ்வர்யா லட்சிமி, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி போன்ற பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

அபர்ணா தாஸ் குறித்த தகவல்:

மேலும், ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் வெளியிட்டுள்ள டாடா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து தெலுங்கில் இவர் Adhikesava என்ற படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அபர்ணா தாசிற்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அபர்ணா தாஸ் திருமண தகவல்:

சமீப காலமாகவே பிரபலங்கள் பலருக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவரை அடுத்து ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. அதேபோல் மறைந்த நடிகர் விவேக்கின் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த வரிசையில் தற்போது நடிகை அபர்ணா தாஸ் இணைந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர்:

இவர் தீபக் பரம்போல் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவரும் நடிகர் தான். சமீபத்தில் வெளிவந்த மஞ்சுமோல் பாய்ஸ் படத்தில் இவர் நடித்திருக்கிறார். மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படத்தில் ஒன்று மஞ்சுமெல் பாய்ஸ். இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

தீபக் பரம்போல்-அபர்ணா தாஸ் திருமணம்:

இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தில் நடித்த தீபக் பரம்போல்-அபர்ணா தாஸிற்கு ஏப்ரல் 24ஆம் தேதி Vadakanchery என்ற இடத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களுடைய திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement