பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்த புட்ட பொம்மா பாடலுக்கு ஆட்டம் போட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.

0
2029
david
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ என்று தன் ரசிகர்களால் பாசத்துடன் அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் சங்கராந்தி பண்டிகைக்கு வெளி வந்த படம் தான் ‘அல வைகுந்தபுரமுலோ’. அந்த படத்தினை டோலிவுட்டில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

இதில் ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பிரபல ஹீரோயின்ஸ் பூஜா ஹெக்டே மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மெகா ஹிட்டானது. மேலும், பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளது.

இதையும் பாருங்க : ப்ப்பா, இந்த வயசுலையும் இப்படியெல்லாம் போஸ் குடுக்குறீங்களே. நடிகையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக ‘புட்ட பொம்மா’ என்ற பாடல் அதிக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் ஆனது. தற்போது, இது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார்.

https://www.instagram.com/p/B_mINrppW7d/

இந்த வீடியோ பதிவில் ‘புட்ட பொம்மா’ என்ற பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக் டாக் செய்து நடனமாடியிருக்கிறார். இவ்வீடியோவில் இன்னொரு ஸ்பெஷலும் இருக்கிறது. என்ன தெரியுமா? கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருடன் இணைந்து அவரது மனைவி மற்றும் மகளும் இந்த டிக் டாக் வீடியோவில் ஆடியிருக்கிறார்கள். அது தான் ஹைலைட்டே. இவ்வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதையும் பாருங்க : ஜோதிகா குறிப்பிட்டு பேசிய மருத்துவமனையில் சிக்கிய பல விஷப்பாம்புகள், ஒருவர் பலி- வைரலாகும் வீடியோ.

-விளம்பரம்-

‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தினை தமிழ் திரையுலகில் ரீமேக் செய்யலாம் என்ற பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் இரண்டு முன்னணி நடிகர்கள் இப்படத்தின் ரீமேக் வெர்ஷனில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த முன்னணி நடிகர்கள் இருவர் நம்ம சிவகார்த்திகேயனும், ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்புவும் தானாம். சிம்பு நடித்தால் அந்த படத்தினை ‘வாலு’ பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்குவாராம். சிவகார்த்திகேயன் நடித்தால் அந்த படத்தினை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ எனும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். ஆனால், சிவகார்த்திகேயன் நடித்தால், அதனை யார் இயக்கப்போகிறார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம் ‘லைகா’ நிறுவனம்.

Advertisement