-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

அரபு நாட்டில் ஷூட், அமெரிக்காவில் டீ-ஏஜிங் வேலைகள், டீசர் வெளியீட்டு பிளான் – GOAT அப்டேட்

0
399

விஜயின் கோட் படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-

இருப்பினும் வசூல் ரீதியாக அந்த படங்கள் வெற்றி கண்டது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் சஞ்சய் தட், கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். விஜய்யின் லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

விஜய் கோட் படம்:

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு கோட் G.O.A.T Greatest of all time என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

படம் குறித்த தகவல்:

-விளம்பரம்-

சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. விஜயை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதி இருந்தது. படப்பிடிப்பிற்கும் நடுவில் விஜய் ரசிகர்களை சந்தித்திருந்தார். தற்போது வெளிநாட்டில் கோட் படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தினுடைய பாடல்கள் சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் அரங்கம் அமைத்து எடுத்தார்கள். மேலும், திரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் என்றும் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

படத்தின் படப்பிடிப்பு:

தற்போது பக்ரைன் நாட்டில் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் படக் குழுவினர் பக்ரைன் நாட்டிற்கு சென்றிருந்தார்கள். ஆனால், படத்தினுடைய இயக்குனர், ஹீரோயின் உட்பட பலருமே ஏற்கனவே சென்று விட்டார்கள். இந்த கோட் படத்தினுடைய மொத்த படபிடிப்பு முடிந்த பிறகு தான் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு டீ-ஏஜிங் டெக்னாலஜிக்கான வேலைக்கு அனுப்பப்படுகிறது.

படம் குறித்த அப்டேட்:

இந்த நிலையில் படம் குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கோட் படத்தின் டீசர் அல்லது முதல் சிங்கிள் லிரிக் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அதே நாளில் தளபதி 69 படத்தினுடைய இயக்குனர் குறித்து விஜய் அறிவித்து விடுவார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏப்ரல் 14 க்கு முன்பே இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்து மொத்த டீமும் சென்னை திரும்ப இருக்கிறது. காரணம் தேர்தல் சமயத்தில் விஜய் சென்னையில் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news