ராஜாவின் பார்வையிலே பட நடிகை இந்த பிரபல சீரியல் நடிகையா ! புகைப்படம் உள்ளே

0
6998
rajaavin paarvaiyile

நான் தமிழ்ப் பொண்ணு. என்னைக்குமே தமிழையும் தமிழர்களையும் மறக்கமாட்டேன். ரசிகர்களும் என்னை மறக்கக் கூடாதுனு நினைக்கிறேன்” என்கிறார் நடிகை இந்திரஜா. ‘ராஜாவின் பார்வையிலே’ மற்றும் ‘எங்கள் அண்ணா’ படங்களில் நடித்தவர். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர்.

indara

விஜய்யுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்துச்சு?
‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் விஜய்க்கு ஜோடி. அவர் ரொம்ப அமைதியான டைப். ஆனால், நடிப்புன்னு வந்துட்டால், தூள் கிளப்பிடுவார். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பார். பல வருஷங்கள் கழிச்சு, விமான நிலையத்தில் ஒரு முறை அவரைப் பார்த்தேன். சின்னச் சிரிப்பை வெளிப்படுத்திக்கிட்டோம். அவரை அப்போ எப்படி இருந்தாரோ அப்படியேதான் இன்னும் இருக்கிறார்.அவர் கொஞ்சம் கூட மாறலை.பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலை.

முதல் சினிமா வாய்ப்பு எப்படி கிடைச்சது?
குடும்பத்தில் யாரும் சினிமாவில் இல்லை. எதேர்ச்சையா வந்த வாய்ப்புதான். அப்படி ‘உழைப்பாளி’ படத்தில் நடிகை ஶ்ரீவித்யாவின் குழந்தைப் பருவ ரோலில் நடிச்சேன். ஒன்பதாவது படிக்கும்போது ‘எமலீலா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினா அறிமுகமானேன். ஒரு வருஷத்திலயே 10 தெலுங்கு படங்களில் நடிச்சுட்டேன். அதில், பெரும்பாலும் ஹிட். அங்கே பீக்ல இருந்த சமயம், ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் ஹீரோயினா அறிமுகமானேன்.

ஆனால், அடுத்த ஏழு வருஷம் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையலை. அதுக்காக வருத்தப்படவும் இல்லை. ஏன்னா, தெலுங்கில் மனசுக்கு நிறைவான படங்கள் அமைஞ்சது. நிறையப் புகழும் விருதுகளும் கிடைச்சது. கிட்டத்தட்ட 60 படங்களில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். இப்பவும் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்குது.

actress indraja

சீரியல் ஆக்டிங் அனுபவம் எப்படி இருந்துச்சு?

சன் டிவி ‘பாசம்’, என் முதல் சீரியல். அந்த சீரியல் நல்லா போயிட்டிருந்த சமயத்தில் சில எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டு, சீரியலே ட்ராப் அவுட் ஆகிடுச்சு. தொடர்ந்து, ‘ஆண் பாவம்’, ‘பைரவி’, ‘வள்ளி’ உள்ளிட்ட சீரியல்களில் நடிச்சேன். சினிமாவுக்கு இணையான ரோல் கிடைச்சா சீரியலில் நடிப்பேன்.