படத்தில் தேவதாசி ! படத்துக்காக சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்தேன் ….ஆனா நான் க்ளாமரா..

0
11461
sai Dhansika

வித்தியாசமான கதைகளங்களாகத் தேடி நடிப்பவர் தன்ஷிகா. தான் நடிக்கும் படங்களில் தனக்கான முக்கியத்துவத்தை வைத்து படங்களை ஓகே செய்பவர். இவர், சமீபத்தில் `சினம்’ என்னும் குறும்படத்தில் தேவதாசியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் கிட்டத்தட்ட பதினாறு விருதுகளை வென்றுள்ளது. மேலும், இந்தக் குறும்படத்துக்கான இசையை ஜி.வி.பிரகாஷ் செய்திருக்கிறார்.

Sai-Dhanshika

நான் நடிக்குற ஃபர்ஸ்ட் ஷார்ட் ஃபிலிம் இது. நல்ல கதையா இருந்தா ஷார்ட் ஃபிலிம் நடிக்குறதுல தப்பில்லை. பெரிய ஆக்டர்ஸ் பண்ணக்கூடாதுனு எதுவும் இல்லை. இண்டர்ஷேனல் ஃபெஸ்டிவலுக்குப் படம் போகும்னு டைரக்டர் சொன்னார். அதுக்காக மட்டும் பண்ணல. அவருக்கு எதாவது ஹெல்ப் பண்ணணும்னு நினைச்சேன். அதனாலேயே இந்தப் படம் நடிச்சேன்.

எனக்கான முடிவுகளை நான்தான் எடுப்பேன். நல்லது கெட்டது என் பெற்றோர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்காங்க. இந்தப் படத்துல நான் தேவதாசியா நடிச்சிருக்கேன். ஆனா, க்ளாமரான சீன்ஸ் எதுவுமிருக்காது. ரொம்ப நீட்டா படத்துல டைரக்டர் சொல்லியிருக்கார். ஆனா, இந்தப் படத்தை பற்றி டைரக்டர் ஆனந்த் மூர்த்தி பிரஸ்கிட்ட சொன்னப் போது, தேவையில்லாத சில ஹெட் லைன்ஸ் வந்துச்சு.

அது எனக்குக் கஷ்டமாயிருந்துச்சு. இப்படியொரு ஹெட் லைன்ஸ் போடுறாங்களேனு பெண்ணாயிருந்து கஷ்டப்பட்டேன். ஆனா, இது எல்லாத்தையும் மீறி படத்துல நான் என்ன பண்ணியிருக்கேன்னு எனக்குத் தெரியும். தப்பான படங்கள் பண்ணக்கூடாதுங்குறதுல தெளிவாயிருக்கேன்” என்றவரிடம், இந்தப் படத்துக்காக நீங்க சிகரெட் பிடிக்கிற மாதிரி சில ஸ்டில்ஸ் வந்துச்சே… அந்தக் காட்சிகளில் எப்படி நடிச்சீங்க என்று கேட்டேன்.

Sinam-dhansika

ரெண்டு ஷாட்ல சிகரெட்டை நான் கையிலே வெச்சிருக்கிற மாதிரி சீன்ஸ் வரும். ஆனா, நான் சிகரெட்டை வாயில வெச்சுப் பிடிக்குற மாதிரி ஒரு ஷாட்கூட இருக்காது. ஜஸ்ட் சிகரெட்டை கையில பிடிச்சிருக்க மாதிரிதான் இருக்கும். எந்தக் காட்சியிலும் ஸ்மோக் பண்ற மாதிரி இருக்காது. படம் பார்த்தா உங்களுக்கே தெரியும். கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்” என்று சொல்லி முடித்தார் நடிகை தன்ஷிகா.