மெர்சல் படத்தில் என் கதாப்பாத்திரம் இதுதான் – மர்மத்தை உடைத்த காஜல் அகர்வால் !

0
1737

தளபதி விஜய் நடிப்பில் தெறி இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்சல்’. தேனாண்டாள் பிலிம்ஸின் 100ஆவது படம் விஜயின் 62ஆவது படம் இது.

பாட்டு,டீசர் என அனைத்து தரப்பினரையும் எதிர்பார்ப்போடு காத்திருக்க வைத்துள்ளது மெர்சல். 10% கேளிக்கை வரியை எதிர்த்து எந்த ஒரு படங்களையும் வெளியிடாமல் தர்ணா செய்து வருகிறது தயாரிப்பாளர் சங்கம். ஆனால், மெர்சல் படக்குழு எப்படியாவது தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.
Actor Vijay

இதையும் படிங்க: மெர்சல் பாடலில் ஒளிந்திருக்கும் ரகசியம்..? ட்வீட் செய்த பாடகர் !

இந்நேரத்தில் படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவரான காஜல் படத்தில் தன்னுடைய கேரக்டரை பற்றி கூறியுள்ளார்.மெர்சல் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் டாக்டர் வேடத்தில் வரும் விஜய்க்கு ஜோடியாக ஒரு மருத்துவ துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கதாபாத்திரம் சற்று அழுத்தமான கதாபாத்திரம் எனவும் அவர் கூறியுள்ளார்.