பிரியங்காவிற்கு இசைவாணி மீது திடீர் பாசம் எப்படி வந்தது ? உண்மையை நோண்டி எடுத்த நெட்டிசன்கள்.

0
477
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது தான் சூடு பிடிக்கத்துவங்கி இருக்கிறது. பொதுவாக பிக் பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு டீம் அமைந்துவிடும். ஆனால், இந்த சீசனில் ராஜு – அண்ணாச்சி, சுருதி – பாவனி போன்றவர்களை தவிர வேறு எந்த கூட்டணியும் ஒருவரை ஒருவர் நம்பும்படி இல்லை. அந்த வகையில் யாரை நம்புவது என்று தற்போது நிர்கதியாய் நின்று கொண்டு இருக்கிறார் பிரியங்கா. ஆனால், தற்போது பிரியங்காவின் அன்பு வலை தற்போது இசை வாணியின் வருகைக்கு காத்துகொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இருந்தே பிரியங்கா அனைவரிடமும் சகஜமாக பேசி வந்தாலும் நாட்கள் செல்ல செல்ல மக்கள் மத்தியில் யாருக்கும் ஆதரவு இருக்கிறது என்பதை யூகித்து அவர்களை பகைத்துக்கொள்ளாமல் இருக்கிறார். ஆரம்பத்தில் ராஜுவை பல முறை குறை சொன்ன பிரியங்கா தற்போது ராஜூவிற்கும் ஆதரவை தெரிந்துகொண்டு அவரை பகைத்துக்கொள்ளாமல் இருக்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிரியங்கா, வாரா வாரம் காப்ற்றப்படும் போட்டியாளர்களை பேட்டர்ன்னை வைத்து அவர்களை சப்போர்ட் செய்ய துவங்கி வருவதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ‘நேற்றைய ஷோ பார்த்ததில் கமல் சார் இசைவாணி ஐ முதலில் சேவ் செய்யறதை கவனித்து வந்த பிரியங்கா சிபி எல்லாம் அவமேல சாப்ட் கார்னர் இருப்பதாக காட்டி கொள்ள முயல்வது தெரிகிறது என்னை பொறுத்தவரைஇசைக்கு ஃபேக்காக சீன் கிரியேட் பண்ணிக்கிற இவங்களை விட இயல்பாக தன்னை தானாகவே காட்டி கொள்ளும் அண்ணாச்சி போன்றவர்கள் ஆபத்து குறைவானவர்களாக தெரிகிறது’ என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

அவ்வளவு ஏன் நேற்றய நிகழ்ச்சியில் டாஸ்க் முடிந்து பேசிய இசைவாணி, தன்னுடைய பாயின்டை சரியாக சொல்லவில்லை என்று நிரூப், ராஜுவெல்லாம் கேட்டனர். உடனே பிரியங்கா ‘அவள மட்டும் ஏன் இப்படி பண்றீங்க பாவம், அவள பேச விடுங்க’ என்று இசைக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார் பிரியங்கா. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போதே வாரா வாரம் யார் காப்பாற்றப்படுகிறார்களோ அவர்களை பிரியங்கா பகைத்துகொள்ள மாட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

-விளம்பரம்-

இநத சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் உள்ளே நுழைந்த போதே ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தின் ஆதரவோடு சென்றவர் பிரியங்கா மட்டும் தான். இதனால் இவர் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் குறிப்பாக ஆரம்ப வாரத்தில் இவர் நிரூப் மற்றும் அபிஷேக்கை சேர்த்துகொண்டு ஆகிய கேம் பலரை எரிச்சலடைய வைத்தது.

உண்மையில் சொல்லப்போனால் பிரியங்கா அவர்களை யூஸ் செய்யவில்லை, அவர்கள் இருவரும் தான் பிரியங்காவை யூஸ் செய்தனர். ஆபிஷேக் வெளியேறிய பின்னர் பிரியங்கா நம்பியது நிரூப்பை தான். ஆனால், அவரும் பிரியங்கா கையை விட்டு சென்றுவிட்டார். சமீப நாட்களாக இவர்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு தான் வருகிறது.

இதனால் பிரியங்கா தற்போது யாருடைய ஆதரவும் இல்லாமல் தான் இருந்து வருகிறார். எனவே, யாரையாவது தனக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் வலை வீசி வருகிறார் பிரியங்கா. அந்த வலையின் ஒரு வலை தான் நேற்று பிரியங்கா, இசைவாணிக்கு ஆதரவாக பேசி அவரை தன் பக்கம் இழுக்க முயன்றது.

Advertisement