சின்னதா ஸ்கெட் போட்டு நடிச்சாத்தான் கிளாமரா..?கல்யாண ஆசை இல்லை.! நடிகை ஓபன் டாக்

0
796
lakshmi-menon-actress

தமிழ் சினிமாவுக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனா, இங்கே சொல்லிக்கொள்ளும்படியான நண்பர்கள் யாரும் இல்லை. அதற்காக நண்பர்களே இல்லைனு சொல்ல வரலை. ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னோட வொர்க் பண்ற சக நடிகர்கள், நடிகைகளிடம் நல்லாப் பேசுவேன். ஆனா, அவங்க குடும்பத்தில் ஒருத்தர்ங்கிற மாதிரியான ஃபீலிங் வந்ததே இல்லை.” – அழகுத் தமிழில் பேசுகிறார், நடிகை லட்சுமி மேனன்.

lakshmi menon

“உடல் எடையைக் குறைக்கப் போறதாவும் சொல்லியிருந்தீங்களே…?”

“அப்படி எங்கேயும் நான் சொல்லலை. எனக்குப் பிடிச்ச சாப்பாடை நல்லா சாப்பிடுவேன். எனக்கு டயட்லாம் செட் ஆகாது. ஆனா, இப்போ கொஞ்சம் வெயிட் குறைஞ்சிருக்கேன். அதுக்குக் காரணம், டான்ஸ். பரதநாட்டியம், குச்சுப்புடி ரெண்டுமே கத்துக்கிட்டு வர்றேன்.”

“கிளாமர் ரோலில் லட்சுமி மேனனைப் பார்க்க முடியாதா?”

“பண்ணக்கூடாதுனு எதுவும் முடிவு கிடையாது. சின்னதா ஸ்கெட் போட்டுக்கிட்டு வந்துதான் கிளாமர் காட்டணும்னு அவசியமில்லை. ஹோம்லியா சேலை கட்டுக்கிட்டும் கிளாமர் காட்ட முடியும். ஆக்சுவலா, பெண்களுக்கு சேலைதான் கிளாமர் டிரெஸ்னு நினைக்கிறேன். ‘பாகுபலி’ படத்துலகூட அனுஷ்கா சேலையில கிளாமராதான் தெரிஞ்சாங்க.”

actress lakshmi menon

“கல்யாணம் எப்போ?”

“எனக்கு திருமண உறவில் நம்பிக்கையில்லை. ஏன்னா, கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் அன்பு, காதல் கிடைக்கும்னு இல்ல. கல்யாணம் பண்ணமாகூட அன்பு, காதலைப் பெறலாம். நான் சொல்றது மத்தவங்களுக்குப் புரியுமானு தெரியலை. ஆனா, அது எனக்கு மட்டும் புரிஞ்ச விஷயம். நான் திருமணத்தை நம்பல. திருமணம் பண்ணிக்கவும் மாட்டேன். அதுக்காக, எனக்கு லைஃப் பார்ட்னர் இருக்காதுனு சொல்ல வரலை. கண்டிப்பா இருப்பார். ‘பார்ட்னர்’ங்கிற வார்த்தைக்கு வலு சேர்க்க நிறைய நம்பிக்கை, அன்பு, காதல் கொண்ட நபர் வேணும். அதைக் கல்யாணம்ங்கிற வார்த்தையில சுருக்க விரும்பலை. அதை, ‘லிவிங் டு கெதர்’னுகூட சொல்லமுடியாது.”