தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மணிரத்னம் ஒருவர். மேலும், மணிரத்னம் இயக்கிய “பம்பாய் ” திரைப்படத்தின் மூலம் நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் அறிமுகமானார். இந்த ஒரு படத்திலே தமிழக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். நடிகை மனிஷா கொய்ராலா நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர் நேபாள–இந்திய நடிகை ஆவார். இவர் முதன் முதலில் திரையுலகிற்கு நேபாள மொழியில் ‘ஃபெரி பெட்டாலா’ என்ற படத்தில் தான் நடித்தார். அதற்குப் பிறகு இந்திய சினிமா உலகில் நடிக்க துவங்கினார்.
அதுவும் ஹிந்தியில் தான் இவரது முதல் படமான ‘சௌடாகர்’ 1991ல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்தார். இவர் அதிகமாக ஹிந்தி, தமிழ் மொழி படங்களில் நடித்து உள்ளார்.அதோடு தமிழில் கமலஹாசனுடன் ‘இந்தியன்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘பாபா’, அர்ஜுனுடன் ‘முதல்வர்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருடைய நடிப்பிற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு என்று கூட சொல்லலாம்.
இதையும் பாருங்க : அவங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்க மேடம் ப்ளீஸ் – கெஞ்சிய போட்டியாளர்கள். காரார் காட்டிய ரம்யா கிருஷ்ணன்.
மேலும்,90களில் நடித்த முன்னணி நடிகைகளுக்கு பயங்கர டஃப் கொடுத்த நடிகை என்று கூட சொல்லலாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாப்பிள்ளை’ படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவை எட்டிப்பார்த்தார் மனிஷா கொய்ராலா. இவர் இந்தி மொழி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். அது மட்டும் இல்லைங்க கடந்த 2012 ஆம் ஆண்டு மனிஷா கொய்ராலா அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும்,இவர் புற்றுநோய் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். தற்போது அவர் புற்றுநோய் விழிப்புணர்வு சம்பந்தமான பணியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், மனிஷா கொய்ராலாவிற்கும் திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகிவிட்டது. தற்போது 50வயது சிங்கிளாக வாழ்ந்து வரும் இவர் சமீபத்தில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.