புது வருசம் பொறந்த கொஞ்ச நாள்லையே மீனா வீட்டில் இப்படி ஒரு சோகமா – அவரே போட்ட பதிவு.

0
531
- Advertisement -

என்னது நடிகை மீனாவுக்கு கொரோனவா?அவரே இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்திற்கு பின் தினசரி 20 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா தொற்று சென்று உள்ளது. இதில் கரோனா வைரசின் அடுத்த நிலையான ஓமைக்கரான் வைரஸ் பரவல் இருப்பதால் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல் படுத்துவதாகவும், தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்துவதாகவும் தகவல் அறிவித்திருந்தார். அதிலும் சமீப காலமாகவே பிரபலங்கள் பலரும் கொரோனா மற்றும் ஓமைக்காரனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கமலஹாசன், வடிவேல், அருண் விஜய் உட்பட பல நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து உள்ளார்கள்.

- Advertisement -

பரவி வரும் கொரோனா:

சமீபத்தில்கூட இயக்குனர் அருண் வைத்தியநாதன் அவர்கள் ஓமைக்காரனால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்திருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை மீனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி பின் பிரபலமான நடிகையாக ஆனார்.

மீனா நடித்த படங்கள்:

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். மேலும், இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் மீனா நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மீனா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மீனா பதிவிட்ட பதிவு:

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்று தந்திருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மீனா பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை மீனா எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் 2022 ஆம் ஆண்டில் எங்க வீட்டுக்கு விருந்தாளியாக கொரோனா வந்துவிட்டது. அது என் குடும்பத்தை விட்டுவைக்கவில்லை.

கொரோனா குறித்து மீனா சொன்னது:

ஆனால், நான் அதை அப்படியே விடமாட்டேன். மக்களே ஜாக்கிரதையாகவும், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள். உங்கள் பிரார்த்தனை எங்களை காப்பாற்றும் என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு இவரின் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் மீனா பூரண குணமடைந்து வரவேண்டும் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement