அதிபுருஷ் படத்தின் ராமன் மற்றும் லக்ஷ்மணன் லுக்கை கேலி செய்து தமிழ் பிக் பாஸ் நடிகை போட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. pan இந்திய படம், சமீப காலமாக சினிமா உலகில் அதிகம் கேட்கப்பட்டு வரும் ஒரு சொல். சமீப காலமாகவே திரைத்துறையில் வெளியாகும் படங்கள் பல மொழிகளில் வெளியாகி வருகிறது. அதற்கு Pan இந்தியா படங்கள் என்று பெயர் வைத்து விடுகின்றனர்.
அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் படங்கள் மற்றும் பிரம்மாண்ட செலவில் உருவாகும் படங்கள் அனைத்தும் அனைத்து மொழிகளிலும் வெளியாகிவிடுகிறது. பொதுவாக தமிழ் நடிகர்களின் படங்கள் தான் மற்ற மொழிகளில் வெளியாகும். மற்ற மொழி நடிகர்களின் படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியாவது குறைவு தான். ஆனால், இந்த கூற்றை மாற்றியது பாகுபலி திரைப்படம் தான்.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுகு ஆகிய இரண்டு மொழிகளிலும் மாபெரும் ஹிட் அடைந்தது. இதனை தொடர்ந்து வெளியான பாகுபலி திரைப்படம் தமிழ், தெலுகு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்து Pan இந்திய படம் என்ற அந்தஸ்தை பெற்றது. அதன் பின்னர் வந்த பாகுபலி 2வும் சரி, சமீபத்தில் வந்த புஷ்பா, RRR படமும் சரி Pan இந்திய லெவலில் வெற்றி பெற்றது.
Is there ANY tradition where Lord Ramji and Laxman are portrayed with moustache and facial hair? Why this disturbing departure ? Especially in prabhas's telugu home, Sri Rama has been played to perfection by legends.
— Kasturi (@KasthuriShankar) June 7, 2023
I feel Prabhas looks like Karna not Rama. #Adipurush pic.twitter.com/glkQZ7nHj9
. இப்படி ஒரு நிலையில் பாகுபலி நாயகன் பிரபாஸ் ‘ஆதிபுருஷ் ‘ படத்தில் நடித்து இருக்கிறார். ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 12 ஆம் தேதியே இதன் ரிலீஸ் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முன்னோட்டமாக வெளியான படத்தின் டீசர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை சந்தித்தன.
படத்தின் காட்சிகள் சிறுவர்கள் பார்க்கும் கார்ட்டூன் போல இருப்பதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர். அதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மெருகேற்றப்பட்டு இப்போது ஜூன் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனாலும் இப்போதும் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. இந்த நிலையில் இந்த படத்தின் ராமன் மற்றும் லக்ஷ்மணன் லுக்கை கேலி செய்து தமிழ் பிக் பாஸ் நடிகை கஸ்தூரி போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கஸ்தூரி ‘ ராமர் மற்றும் லக்ஷ்மணன் மீசை மற்றும் தாடியுடன் சித்தரிக்கப்படும் பாரம்பரியம் ஏதேனும் உள்ளதா? ஏன் இப்படி வினோதமான வேலை ? அதிலும் பிரபாஸின் பூர்விகமான தெலுங்கு சினிமாவில் ராமர் கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக எத்தனையே லெஜண்ட்டுகள் நடித்து இருக்கிறார்கள். எனக்கு பிரபாஸை கண்டால் ராமர் போன்று தெரியவில்லை கர்ணன் போல தான் இருக்கிறது என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.