7 வயசு பையனுக்கு அம்மா.! ரோட்டுல கீரை விக்குறேன்.! கண்கலங்கிட்டேன்..! பிரபல நடிகை.!

0
1878
Actress-nanditha-swetha
- Advertisement -

இப்போ தமிழ்ல மூணு படம், தெலுங்குல அஞ்சு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் வீட்டுக்குப் போய் ஆறு மாசம் ஆகிடுச்சு. இப்போகூட ஒரு தெலுங்குப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குத்தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன்” உற்சாகத்தோடு பேச ஆரம்பிக்கிறார், நந்திதா.

-விளம்பரம்-

nanditha

- Advertisement -

ஏழு வயசுப் பையனுக்கு அம்மாவா நடிக்கிறீங்களாமே! எப்படி ஓகே சொன்னீங்க?
“ஆமா. பாலா சாரோட உதவியாளர் கீதா இந்தப் படத்தை இயக்கப்போறாங்க. படத்துக்குப் பெயர், ‘நர்மதா’. நதியைக் குறிக்கிறதுக்காக இந்தப் பெயரை வெச்சிருக்காங்க. எல்லா அம்மாக்களையும் நதியோட கம்பேர் பண்ணி எழுதப்பட்டிருக்கிற கதை. ‘உப்புக்கருவாடு’ படத்துக்குப் பிறகு, ஹீரோயின் சம்பந்தப்பட்ட கதை நிறைய வந்தது. ஆனா, நான் பண்ணலை. காரணம், அந்த மாதிரி படங்கள் பண்ணும்போது மார்கெட், கான்செப்ட் எல்லாமே நம்ம ஷோல்டருக்கு வந்திடும். இவ்வளவு சீக்கிரமா அந்தப் பொறுப்பை எடுத்துக்க விரும்பலை. ஆனா, ‘நர்மதா’ அதுல ஸ்பெஷல்.

எல்லா பெண்கள் சார்பாகவும் நான் அங்கே நிற்கிறேன்ங்கிற ஃபீல் கொடுத்தது. அது எனக்குப் பிடிச்சிருந்தது. நாட்டுல பெண்களுக்கு நடக்கிற நிறைய முக்கியமான விஷயங்களைப் படத்துல பேசியிருக்கோம். ஸ்கிரீன்ல என்னைப் பார்த்து ஒவ்வொரு அம்மாவும் அந்த கேரக்டரா தன்னை உணர்வாங்க. ஒரு ஆர்டிஸ்ட்டா இந்தக் கேரக்டரை விட்டுக்கொடுக்கக் கூடாதுனு தோணுச்சு. அதனாலேயே உடனே ஓகே சொல்லிட்டேன். கண்டிப்பா இந்தப் படம் என்னையும் இயக்குநர் கீதாவையும் அடுத்த கட்டத்துக்கு கூட்டிக்கிட்டுப் போகும்!”

-விளம்பரம்-

Attakathi Nandhita Swetha

என்ன மாதிரியான ரோல்?

“நாகர்கோவில்தான் கதைக்களம். ஸ்கூலுக்குப் போற ஒரு பதினாலு வயசுப் பொண்ணு, ஏழு வயசுப் பையனுக்கு அம்மா. ஏன், எதுக்கு, எப்படிங்கிறதுதான் திரைக்கதை. படத்துல எனக்கு ரெண்டுவிதமான லுக் இருக்கு. ஸ்கூல் போர்ஷனுக்காக நல்லா வெயிட் குறைச்சு நடிச்சிருக்கேன். இவ்ளோ சின்னப் பொண்ணு, ஏழு வயசுப் பையனுக்கு அம்மாவா இருக்காங்கன்னா, அதுக்குக் காரணம் என்னவா இருக்கும்? அதைப் படத்துல சொல்லியிருக்கோம். கீரை விக்கிற பொண்ணு கேரக்டர்ல நடிச்சிருக்கேன். மாடலிங் ஃபீல்டுல ஸ்டேஜ்ல ராம்ப் வாக் பண்ணிட்டிருந்தேன். இந்தப் படத்துல ரோட்டுல கீரை விக்கிறதை ஊரே நின்னு பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ, உண்மையாவே கண் கலங்கிட்டேன். இந்த மாதிரி வித்தியாசமான கேரக்டர்கள்ல நடிக்கிறதை நான் பெருமையா நினைக்கிறேன்.”

Advertisement