விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்திய நடிகை நஸ்ரியாவின் வீடியோ – இதான் அது.

0
598
naz

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பல்வேறு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பாகவே யூடியூபில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. அவ்வளவு ஏன் இந்த பாடலுக்கு தான் நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் நடனம் ஆடி இருந்தார். அதேபோல திரை அரங்கிலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : என்ன, ரெண்டும் ஒரே மாதிரி இருக்கு – நயன், நிவேதா-வை பார்த்து குழம்பி போன ரசிகர்கள். காரணம் இதான்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகை நஸ்ரியா,இதே பாடலுக்கு தனது தோழியுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நஸ்ரியா. தமிழில் நேரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. பிறகு ராஜா ராணி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர். அதற்கு பிறகு நையாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்து இருந்தார். பின் நஸ்ரியா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் பெங்களூர் டேஸ். இந்த படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ரீமேக்காகி அந்த மொழிகளிலும் பாராட்டப்பட்டது.

இது நடிகை நஸ்ரியா மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்த படம். ‘பெங்களூர் டேஸ்’ வெளியான ஆண்டிலேயே அதாவது 2014 ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியா, நடிகர் பகாத் பாஸிலை திருமணம் செய்து கொண்டார். நடிகை நஸ்ரியா திருமணம் ஆனாலும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே இன்று வரை திகழ்ந்து வருகிறார். நடிகை நஸ்ரியா அவர்கள் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தனது கணவர் பகத் பாசிலுக்கு ஜோடியாக மலையாளத்தில் உருவாகி இருந்த “ட்ரான்ஸ்” என்ற படத்தில் இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement