பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று வார்த்தை கடந்துள்ளது இந்த நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து வனிதா வெளியேறியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த வனிதா சென்ற பிறகு இந்த நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்து விட்டது என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.
வனிதா இல்லாமல் இனி பிக் பாஸ் வீட்டில் சண்டே இருக்காது என்று கவின் கூட தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வனிதாவிற்கு நிகராக வைல்டு கார்டு என்ட்ரி மூலம் புதிய போட்டியாளர் களமிறங்கப் போவதாக சில தகவல்கள் வெளியானது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17ஆவது போட்டியாளராக பிரபல நடிகையான சங்கீதா கலந்து கொள்ளப் போகிறார் என்று செய்திகள் சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வந்தது.
இதையும் பாருங்க : சாக்க்ஷியையே வாயடைக்க வைத்த மீரா.! என்னா பொய்டா சாமி.!
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் பிரபலங்கள் இருப்பார்கள். அந்த வகையில் நடிகை சங்கீதாவும் சீசன் மூலம் மூலம் விஜய் டீவியில் களமிறங்கினார். ஜோடி சீசன் போது மீராவுடன் இவர் சண்டையிட்ட வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. எனவே, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
சங்கீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டால் அவர் வனிதா இல்லாத குறையை தீர்த்து வைப்பார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த நிலையில் சங்கீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அவரது கணவர் கிரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகையான சங்கீதா பிரபல பாடகரான கிரிஷ்ஷை திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். சமீபத்தில் கிரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சங்கீதா கலந்து கொள்ளப் போவதாக வந்த செய்தி உண்மைதானா என்று கேட்டு இருந்தார். அதற்கு பதிலளித்த க்ரிஷ் அது வெறும் வதந்திதான் ப்ரோ என்று பதிலளித்துள்ளார் இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.