மாயா படத்தில் பாபாவாக நடித்த குழந்தை இந்த நடிகையா ? புகைப்படம் உள்ளே

0
7242
maaya movie

1996 இல் வெளியான விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் மீனா என்ற குழந்தை நட்சித்திரமாக நடித்தவர் தான் நடிகை ஷீலா கவுர்.

Meena kaur

இவர் பூவே உனக்காக படத்திற்கு பிறகு நெப்போலியன் ,நக்மா நடித்த மாயா என்ற சாய் பாபாவின் பக்தி படத்தில் பையனாக நடித்தார்.அதன் பின்னர் அஜித் நடித்த தீனா படத்திலும் சூரியா நடித்த நந்தா படத்திலும் தங்கையாக நடித்தார்.இப்படி விஜய், அஜித், சூர்யா என்ற மூன்று முன்னனி நடிகர்களுடனும் சிறுவத்திலேயே நடித்த பெருமை ஷீலாவிற்கு உண்டு.

பார்ப்பதற்கு நல்ல போட்டோஜெனிக் முகமாக இருக்கிறீர்கள் கண்டிப்பாக சினிமாவில் ஹீரோயினியாக வலம் வருவீர்கள் என்று இவர் நடித்த மாயா படத்தை இயக்கிய ராமநாராயணன் கூறியிருந்தாராம்.அந்த வார்த்தை நிஜமான வகையில் இவர் அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யாவிற்கு தம்பியாக நடித்த நாவதீப் நடிப்பில் வெளியான இளவட்டம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.அந்த படத்திற்கு பிறகு சீனா தானா,கண்ணா, வேதா போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.

sheela kaur

sheela kaur

தமிழில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்காத நிலையில் தெலுகு மற்றும் கன்னட சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அங்கும் ஒரு முன்னணி நடிகையாக வலம்வர முடியவில்லை.