தமிழில் ‘மழை,சிவாஜி,அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஷ்ரயா. சில மாதங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலரான ரஷ்யாவை சேர்ந்த அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், குழந்தைக்கு மட்டும் நோ சொல்லி வருகிறாராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. ஆனால், சில வருடங்களாக இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தெரியாமல் இருந்தது .திடீரென்று கடந்த மார்ச் 12 ஆம் தேதி ரஸ்யாவை சேர்ந்த தனது காதலரை மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார்.
தனது 35 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயா, திருமணத்திற்கு பின்னர் தனது காதல் கணவருடன் தேனிலவு கொண்டாடி வந்தார். இதனால் நடிகை ஷ்ரேயா மீண்டும் நடிப்பாரா மாட்டாரா என்று ரசிகர்கள் சந்தேகித்து வந்தனர். ஆனால், தற்போது தெலுங்கில் இரண்டு படத்திலும், தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
பெரும்பாலும் நடிகைகள் திருமணத்திற்கு பின்னர் ஓரிரு ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.ஆனால், தற்போதே 35 வயதாகும் நடிகை ஸ்ரேயா இன்னும் ஒரு 10 படங்களில் நடித்த பிறகே குழந்தையை பற்றி யோசிப்பேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் ’10 படம் நடிக்கர்துக்குள்ள 45 வயதாகிடும் , அப்போ குழந்தை பெத்து என்ன பண்ண போறீங்க’ என்று கிண்டல் செய்து வருகின்றனர்.