உன்னையெல்லாம் யார் ஹீரோயின் ஆக்கியது ? தனுஷ் பட நடிகையை கிண்டல் செய்த நபர் ! நடிகை பதிலடி

0
1655
Actress Tapsee pannu

தமிழில் தனுஷ் உடன் ஆடுகளம் படத்தில் அறிமுகமான வர் நடிகை டாப்ஸி .டெல்லியில் பிறந்த இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்தார்.பின்னர் 2010 இல் தெலுங்கில் வெளியான ஜும்மண்டி நாடம் என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார்.

Harjot-singh

தமிழில் ஆடுகளம்,வந்தான் வென்றான்,ஆரம்பம், காஞ்சனா,வை ராஜா வை போன்ற படங்களில் நடித்துள்ளார்.தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் தெலுகு மலையாள படங்களில் அம்மணி பல முன்னணி ஹீரோக்களுடன் படு கிளாமராக நடித்துள்ளார்.

பொதுவாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகரம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டாப்ஸி தனது சமூக பக்கத்தில் நக்கலாக கமேட் செய்தால் உடனுக்குடன் மூக்கை உடைப்பது போன்று பதிலை கூறிவிடுவார்.சமீபத்தில் ரசிகர் ஒருவர் டாப்ஸியிடம் உங்களை எல்லாம் யார் கதாநாயகியாக போட்டது நீங்கள் சுமாராக தான் இருக்கிறீர்கள் என்று ட்வீட் செய்துள்ளார்

அதற்கு டாப்ஸி கொஞ்சம் கூட கோவப்படாமல் மிகவும் கூளாக நான் ஏதோ சுமாராக நடிப்பதால் என்னை கதா நாயகியாக ஆக்கிவிட்டார்கள்,மேலும் சுமாராக இருப்பதில் ஒன்றும் தவறில்லை என்று நினைக்கிறேன்,இந்த உலகத்தில் அது தான் பெருபான்மையாக உள்ளது என்று பதிலளித்துள்ளார்.