ஒரு திருநங்கை லவ் ஸ்டோரி இப்படி ஒர்க் அவுட் ஆகும்னு நினைக்கல –  நம்ம பையன் திருநங்கை கல்பனா

0
496
- Advertisement -

தற்போது இணையத்தில் நம்ம பையன் என்ற வெப் தொடர் தான் வைரலாகி வருகிறது. இது லவ் வித் ட்ரான்ஸ்ஜென்டர் என்ற கான்செப்டில் வெளியாகியிருக்கிறது. இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் இந்த வெப் தொடருக்கு பாஸ்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். மேலும், இந்த வெப் தொடரில் சந்திரா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் திருநங்கை கல்பனா.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த தொடரில் நடித்தது குறித்து தற்போது இவர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இப்போது வெளியில் எங்க போனாலும் என்னை எல்லோரும் சந்திரா என்று தான் கூப்பிடுகிறார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. திருநங்கை என்றாலே ஒரு விதமான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள். ஆனால், இப்படி ஒவ்வொன்றாக சாதித்து ஒவ்வொருத்தராக முன்னேறும் போது எங்களையும் சாதாரணமான மனிதர்களாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

- Advertisement -

திருநங்கை கல்பனா பேட்டி:

தற்போது ஆக்டிங்கில் கல்பனா என்ற ஒரு திருநங்கை இருக்கிறாங்க என்று பொதுமக்கள் சொல்வது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. மேலும், எனக்கு சர்ஜரி பண்ணுவதற்கு முன்னாடி என்ன சொல்றது? எப்படி சொல்றது? என்று தெரியாமல் ஒரே குழப்பத்தில் இருந்தேன். என்னுடைய திருநங்கை தோழி ஒருத்தரிடம் எல்லாத்தையும் எடுத்துச் சொன்னேன். அப்போ எனக்கு, யாரு என்ன சொன்னாலும் நாம ஒரு பொண்ணு. உடனே சர்ஜரி பண்ணியே ஆகணும் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். அப்போது அவர்கள் திருநங்கையாக இருந்தால் இந்த சமூகத்தில் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்திருந்தார்கள்.

திருநங்கை குறித்து சொன்னது:

அவர்களும் என்னை புரிந்து கொண்டு சப்போர்ட் பண்ணினார்கள். அவர்களுடைய உதவியால் சர்ஜரி பண்ணிக்கொண்டேன். என்னுடைய வீட்டிலும் விஷயத்தை சொன்னவுடன் அவர்களும் என்னை புரிந்து கொண்டு ஏற்று கொண்டார்கள். நிறைய பெற்றோர்கள் என்னை மாதிரி திருநங்கைகளை ஏற்றுக் கொள்ளாமல், எங்கள் பிள்ளைகள் இறந்து விட்டார்கள் என்று சொல்லி எல்லாம் இருக்கிறார்கள். அதெல்லாம் ரொம்ப தப்பு. இது நாங்களா உருவாக்குனது இல்லை. எங்களுடைய ஹார்மோன் மாற்றம் தான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும். பொண்ணா இருந்தால் தான், பையனா இருந்தால் தான் கடைசி காலத்தில் அம்மா, அப்பாவை பார்த்துக் கொள்வார்கள் என்றெல்லாம் இல்லை.

-விளம்பரம்-

வெப் சீரிஸ் குறித்து சொன்னது:

நாங்களும் அன்பாகவும் பார்த்து கொள்வோம். என்னோட அப்பா அம்மாவுக்காக சொந்தமா ஒரு வீடு கட்டி கொடுத்து நான் தான் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மேலும், மதன் என்னோட பிரண்ட். அவனுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். இந்த ப்ராஜெக்டுக்காக என்னிடம் கேட்டான். உண்மையாகவே நான்தான் ஹீரோயினா? என்றெல்லாம் கேட்டேன். இந்த கதாபாத்திரத்துக்கு நீ தான் சரியாக இருப்பாய், நல்ல கான்செப்ட் நிச்சயம் மக்கள் மத்தியில் பிடிக்கும் என்றெல்லாம் சொன்னான். அவன் நினைத்தது போலவே இந்த வெப் சீரிஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

கல்பனா ஆசை:

இதன் மூலம் தான் நான் மீடியாவிற்கு நுழைந்தேன். நமக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க நம்ம பண்ற கதாபாத்திரம் நடிப்பும் தான் ஒரு நடிகைக்கு தேவையே தவிர அழகு முக்கியம் இல்லை என பல நடிகர்கள் நிரூபித்து இருக்கிறார்கள். அப்படி நடிப்பில் என்னுடைய பெஸ்ட்டை கொடுத்ததால் தான் மக்களும் என்னுடைய திறமையை மதித்து என்னை ஏற்றுக் கொண்டார்கள். எங்கு பார்த்தாலும் நீங்க தானே சந்திரா என்று கேட்கிறார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. நாங்க பண்ற வெப் சீரிஸ் கான்செப்ட்டை சீரியலாக எடுக்கணும். அதில் எங்களுடைய கஷ்டத்தை எல்லாம் சொல்லணும் என்று ஆசை. அது மட்டும் இல்லாமல் அதே மாதிரி ஒரு சீரியலில் நடிக்கணும் என்று எனக்கு ஆசை என்று கூறி இருந்தார்.

Advertisement