ரகசிய நிச்சயதார்த்தம், விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறாரா சரத் குமாரின் மகள்?

0
1161
Sarath-kumar
- Advertisement -

பிரபல நடிகரான சரத்குமாரின் முதல் மனைவியான சாயா என்பவருக்கு பிறந்தவர்கள் தான் வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பூஜா. இதில் வரலக்ஷ்மி தமிழ் சினிமாவில் “போடா போடி” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பின்னர் மலையாள, கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

Varalakshmi

- Advertisement -

தற்போது தமிழில் “சர்கார்,சண்டக்கோழி, நீயா 2 “போன்ற பல படங்களில் நடித்துவருகிறார். நடிகை வரலக்ஷ்மி, நடிகர் விஷாலை காதலித்து வருகிறார் என்ற செய்திகள் கடந்த சில மாதங்களாகவே நிலவி வந்தது. ஆனால், இதுகுறித்து இருவருமே வாய் திறக்காமலே உள்ளனர்.

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மிக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றும் சில செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.ஆனால், இந்த தகவலை மறுத்துள்ளார் நடிகை வரலக்ஷ்மி.

-விளம்பரம்-

Varalakshmi-Sarathkumar-Vishal

சமீபத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகை வரலக்ஷ்மி, எனக்கு திருமணம் ஆகப்போகிறது என்று சில வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், எனக்கு நிட்சதர்த்தமும் ஆகவில்லை நான் திருமணமும் செய்துகொள்ள போவது இல்லை. இதுபோன்ற செய்திகளை பரப்பும் வேலைவெட்டி இல்லாதவர்களுக்கு எனது நன்றிகள் என்று கூறியுள்ளார்.

Advertisement