எனக்கு “1” போதாது….5 வேண்டும்..! சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி அதிரடி பேச்சு..!

0
109
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அதில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் அவர் கூறுவதில் நியாயம் இருக்கிறது என்று நடிகை ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது என்ற ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தனது வாழ்க்கை வரலாறு படமாவது குறித்து தனது தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டி”ரெட்டி டைரி திரைபடம் என்னுடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்படும் படமல்ல. அது வேறு ஒரு நடிகையின் வாழ்க்கை வரலாறு படம். அந்த படத்தில் நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் விரைவில் நடிப்பேன். அதற்காக நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த பதிவின் அடுத்த பதிவில்”என்னுடைய வாழக்கை வரலாற்று படத்தை எடுக்க ஒரு பாகம் பத்தாது. அதற்கு 5 பாகங்கள் தேவைபடும்” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.ஆனால் இயக்குனர் அலாவுதீன் என்பவர் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவுள்ளார் என்றும் .இந்த திரைப்படத்திற்கு “ரெட்டி டைரி ” என்ற தலைப்பை வைத்துள்ளனர். மேலும், இந்த படத்தில் ஸ்ரீரெட்டியே கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்றும் சில தகவல்கள் வெளியாகியுலள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகிவில்லை.

Advertisement