ஷங்கர் மகள் அதிதி நடித்து இருக்கும் முதல் விளம்பரத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தற்போது இவர் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தி படத்தில் தான் சங்கர் மகள் அதிதி நடித்து இருக்கிறார். கார்த்தி ஹீரோவாக நடித்து இருக்கும் படம் ‘விருமன்’. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருக்கிறார்.
விருமன் படம்:
கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் முத்தையா இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் தான் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார்.
படத்தின் வசூல்:
இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இந்த படத்தில் இடம் பெற்ற மதுர வீரன் பாடலை அதிதி தான் பாடி இருக்கிறார். இந்த படம் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் நடிகை அதிதிக்கும் இந்த படம் சிறந்த தொடக்கமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் அதிதிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.
அதிதி குறித்த தகவல்:
பலரும் அதிதி நடிப்பையும், நடனத்தையும் பாராட்டி வருகின்றனர். தற்போது இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க அதிதி கமிட்டாகியிருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், சிம்புவின் கொரோனா குமார் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
அதிதியின் முதல் விளம்பரம் :
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருமன் பாடதிற்கு பின்னர் அதிதி பல பேட்டிகளில் பங்கேற்று இருந்தார். அதில் மிகவும் சுட்டித்தனமாக பேசி இருந்தார் அதிதி. இப்படி ஒரு நிலையில் அதிதி தனது முதல் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் தான் அதிதி நடித்து இருக்கிறார்.