இந்த மாதிரி செயல்களை ஆதரிக்க வேண்டாம் – ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரசிகர்கள் அட்வைஸ்

0
273
- Advertisement -

இப்படி நீங்களே செய்யலாமா? என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்ட வீடியோவை கண்டித்து நெட்டிசன்கள் பதிவிடும் கமெண்ட் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவராக திகழ்கிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் கனா படம் மூலம் தான் இவருக்கு நல்ல பெயர் ஏற்படுத்தி தந்தது. அதோடு சமீப காலமாக இவர் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஆர்.ஜே.பாலாஜி நடித்த “ரன் பேபி ரன்” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ஆனால், அது ஒரு சிறிய கதாபாத்திரம் தான்.

- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த “சொப்பன சுந்தரி” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருக்கிறார். இப்படத்தை எஸ்.எஸ்.சார்லஸ் இயக்கி இருக்கிறார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. பின் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த படம் ஃபர்ஹானா. பின் கடைசியாக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தீராக் காதல்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நாயர் உட்பட பல நடிகர்கள் ஷிவதா இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படி தற்போது இவர் மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் ஜி.வி பிரகாஷ் உடன் டியர் என்ற படத்தில் ஐஸ்வர்யா நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராஜேஷ் சுற்றுப்பயணம்:

இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுலா பயணம் சென்றிருக்கிறார். அப்போது அங்கு அவர் ஒரு டால்பினுக்கு உணவளித்து அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதை தான் இவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவன், இந்த மாதிரியான தீம் பார்க்குகளை ஆதரிக்க வேண்டாம். இப்படி பிரபலங்கள் வணிக கட்டமைப்புகளை ஆதரிப்பது இந்த உயிரினங்களுக்கு ஆபத்தானது.

நெட்டிசன் கண்டனம்:

இந்த உயிர் இனங்களை உலகத்தில் இருந்து இயற்கைக்கு மாறாக அப்புறப்படுத்தி விடும். டால்பின் போன்ற உயிரினங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக தண்ணீர் குளங்களில் அடைக்கப்பட்டு இருப்பதால் அது நிறைய கொடுமைகளை அனுபவித்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் டால்பின்கள் சிறு குஞ்சுகளாகவே இருக்கும் போது தாய் தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக கூண்டுகளில் அடைத்து வளர்க்கிறார்கள். அதனால் இந்த மாதிரியான செயல்களை ஆதரிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இப்படி நெட்டிசன் பதிவிட்ட கமெண்டுக்கு பலருமே லைக் செய்து அவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

Advertisement