இதனால் தான் சுந்தரி 2வில் நடிக்க ஒப்புக்கொண்டேன் – தெய்வமகள் சீரியல் கிருஷ்ணா விளக்கம்.

0
842
Sundari2
- Advertisement -

சுந்தரி 2 சீரியலில் நடிக்க காரணம் இதுதான் என்று நடிகர் கிருஷ்ணா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் சுந்தரி. இந்த சீரியல் மூலம் கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார். இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற பிரச்சனைகளை சமாளித்து போராடும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் உடையவள். ஆகவே, நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார் சுந்தரி. அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. தற்போது இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

சுந்தரி 2 சீரியல்:

அதில் சுந்தரி கலெக்டராக இருக்கிறார். மேலும், இந்த இரண்டாம் பாகத்தில் தெய்வமகள் சீரியல் நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார். சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் கிருஷ்ணா. இவர் கிருஷ்ணா என்பதைவிட தெய்வமகள் பிரகாஷ் என்றால் தான் பலருக்கும் தெரியும். சன் டிவியில் 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று தெய்வமகள்.

கிருஷ்ணா நடித்த படங்கள்:

இந்த சீரியலில் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் கிருஷ்ணா. தெய்வமகள் கிருஷ்ணா சீரியலில் நடிப்பதற்கு முன்பாக பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் அழகிய அசுரா, பத்து பத்து ,ஈரம், பலம், ஆனந்தபுரத்து வீடு போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல சன் தொலைக்காட்சியில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஒளிபரப்பான குகன் என்ற தொடரில் கிருஷ்ணா துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கிருஷ்ணா அளித்த பேட்டி:

அதனை தொடர்ந்து இவர் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் தாலாட்டு என்ற சீரியலில் நடித்து வந்தார். தற்போது இவர் சுந்தரி 2 சீரியலில் சுந்தரிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தத் தொடரிலும் தாலாட்டு சீரியலில் நடித்த சிறுவன் சர்வேஷ் ராகவ் நடிக்கிறார். இந்நிலையில் தொடர்பாக சமீபத்தில் நடிகர் கிருஷ்ணா பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நான் ஏற்கனவே சுந்தரி சீரியலை பார்த்திருக்கிறேன். இரண்டாம் பாகத்தில் நடிக்க கேட்டார்கள். அது நன்றாக போய்க்கொண்டிருக்கும் சீரியல் மற்றும் என் கதாபாத்திரம் நன்றாக இருந்தது.

சீரியலில் நடிக்க காரணம்:

இதனால் நான் ஓகே சொன்னேன். முதலில் புரிஞ்சிக்காமல் பிரச்சனையினால் எனக்கும் சுந்தரிக்கும் இடையில் நிறைய சண்டை வர மாதிரி கதை நகரும். என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் வெற்றி வேலன். இப்போது பரபரப்பாக சூட் போய்க்கொண்டிருக்கிறது. அதேபோல் சர்வேஷ் உடன் மீண்டும் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கும் அவருக்கும் இடையே நல்ல தொடர்பு இருக்கிறது. தாலாட்டில் என்னை விஜய் அப்பா என்றுதான் கூப்பிடுவார். இப்பவும் அப்படித்தான் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மறுபடியும் அவருடன் சேர்ந்து நடிப்பது நன்றாக இருக்கிறது. ரொம்ப ஜாலியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement