விஜயகாந்தின் இறப்பு குறித்து கேட்ட கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
சமீப காலமாக இவர் படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. பின் கடைசியாக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த தீராக் காதல் படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நாயர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி;
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு ஐஸ்வர்யா சென்றிருக்கிறார். அங்கு பத்திரிக்கையாளர்கள் ஐஸ்வர்யாவை பேட்டி எடுத்திருக்கிறார்கள். அப்போது அவரிடம் விஜயகாந்த் இறப்பு குறித்து கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், இது கடை திறப்பு விழா. இது சம்பந்தப்பட்ட கேள்வி கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். இருந்தாலும், செய்தியாளர்கள் விஜயகாந்த் உடைய இறப்பு குறித்து கேட்டுக் கொண்டிருந்ததால் ஐஸ்வர்யா கைகூப்பி கும்பிட்டு எனக்கு வருத்தம் தான்.
கேப்டன் பற்றி பேசியதும் கைகூப்பி ‘வேற பேசலாமே’ என சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடுத்தடுத்து இடியாய் விழுந்த கேள்விகள்#Chennai #Tambaram #AishwaryaRajesh #NewsTamil24x7 pic.twitter.com/NAW7TW5KaW
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) January 3, 2024
விஜயகாந்த் குறித்து சொன்னது:
அந்த சமயத்தில் நான் இல்லை. சூட்டிங்காக நான் பாண்டிச்சேரியில் இருந்தேன். என்னால் வர முடியவில்லை. அவர் இறந்தது வருத்தம் தான் என்று கூறியிருக்கிறார். பின் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜய்காந்தின் பெயர் வைப்பது குறித்து கேட்டதற்கு எல்லோருடைய முடிவு தான் என்னுடைய முடிவும். எல்லோருக்கும் சம்பந்தம் என்றால் எனக்கும் சம்மதம். பின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் பலரும் உதவி செய்துள்ளார்கள்.
கேபிஒய் பாலா குறித்து சொன்னது:
குறிப்பாக கேபிஒய் பாலா உதவி செய்திருக்கிறார். ஆனால், நடிகைகள் எதுவுமே செய்வதில்லை. இது குறித்து உங்களுடைய கருத்து என்று கேட்டதற்கு, எல்லோருமே உதவி செய்வது நல்ல விஷயம் தான். உதவி செய்வதை வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நானும் செய்திருக்கிறேன். அதைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. வெளியில் சொன்னாலும் நல்லது தான். இதை பார்த்து இளம் தலைமுறைகள் உதவுவார்கள். கே பி ஒய் பாலா செய்தது பாராட்டுக்குரிய விஷயம்தான் என்று என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.
கேப்டன் மறைவு:
ஒட்டுமொத்த தமிழகத்தையும் விஜயகாந்தின் இறப்பு செய்தி புரட்டி போட்டது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்கள். தற்போது ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.