நியூ படத்திற்காக அஜித் – ஜோதிகா நடத்திய போட்டோஷூட்.! வெளியான போஸ்டர்.!

0
1628
- Advertisement -

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்படும் அஜித் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார் இருப்பினும் இவர் பல படங்களை தவற விட்டிருக்கிறார். அப்படங்களை வேறு சில நடிகர்கள் நடித்து அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. அந்த வரிசையில் எஸ் ஜே சூர்யா நடித்த நியூ படமும் ஒன்று.

-விளம்பரம்-
Image result for new movie s j surya

இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா முதல் முறையாக தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக தான் அறிமுகமாகியிருந்தார். இவர், முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் ‘வாலி’ படத்தை இயக்கியிருந்தார் அந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திலும் தோன்றியிருந்தார்.

இதையும் படியுங்க : ஜெமினி படத்திற்காக அஜித் நடித்திய தர லோக்கல் போட்டோ ஷூட்.! மிஸ் பண்ணிட்டோம்.!

- Advertisement -

அதன் பின்னர் விஜயை வைத்து ‘குஷி’ என்ற படத்தையும் இயக்கி இருந்தார். இந்த இரண்டு படங்களும் புகழின் உச்சிக்கே சென்றார் எஸ் ஜே சூர்யா. அதன் பின்னர் இவர் கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த ‘நியூ’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகியிருந்தார். ஆனால், முதன் முதலில் இந்த படத்தில் அஜீத் தான் நடிக்க இருந்தார்.

சொல்லப்போனால் இந்த படத்திற்காக நடிகர் அஜித் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் தான் அஜித் ‘அட்டகாசம்’,’ ஜனா’ போன்ற இரண்டு படங்களில் கமிட் ஆகி இருந்ததால் நியூ படத்தில் அஜீத்தால் நடிக்க முடியாமல் போனது. இதனால் இந்த படத்தில் தாமே நடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தார் எஸ் ஜே சூர்யா. இந்த படமும் மாபெரும் வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement