தமிழ் சினிமாவின் தல என்றழைக்கபடும் நடிகர் அஜித்தின் எளிமையும், சக நடிகர்களை அவர் நடத்தும் விதம் குறித்து அவருடன் பணியாற்றிய பல்வேறு நடிகர்கள் பல முறை பகிர்ந்துள்ளார்கள். இந்நிலையில் அஜித், திறமை எந்த இடத்தில் இருந்தாலும் அதனை பாராட்டும் குணமுடையவர் என்பதை நிரூபிக்கும் விதமாக மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கிவரும் ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரும் நடித்து வருகிறார். மேலும், நடிகர் ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ்’ நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ‘கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ்’ நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதில் பங்குபெற்றுள்ள 5 வயது சிறுமியான கீர்த்தனா, வீரம் படத்தில் வரும் அஜித்தை போன்று ஒரு கெட்டப்பில் வந்து அனைவரையும் அசத்தி இருந்தார். அந்த நிகழிச்சியை நிறைய பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
சிறுமி கீர்த்தனாவின் நடிப்பை கண்டு அசந்துள்ள நடிகர் அஜித், நடிகர் ரோபோ ஷங்கரிடம் , யார் அந்த குட்டி குழந்தை, என்னைப் போலவே மிகவும் அழகாக நடிக்கிறார், என்னுடைய வாழ்த்துக்களை அந்த சிறுமிக்கு சொல்லிவிடுங்கள் என்று கூறியுள்ள அஜித் அதோடு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துவிடுங்கள் என்று கூறியுள்ளாராம்.