புதியவர்களிடம் பேசும்போது அஜித் இப்படிதான் நடப்பார் – சந்தோஷ் நாராயணன்..?

0
611
ajithkumar
- Advertisement -

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களில் அஜித்தும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறார். ரசிகர்களை தாண்டி சினிமா துறையில் இருக்கும் பல பிரபலங்களும் அஜித்தின் குணத்தை பற்றி பலமுறை புகழ்ந்து கூறியுள்ளனர் என்பது நாம் அறிந்த ஒரு விடயம் தான்.

ajithkumar

பல நடிகர், நடிகைகள் அஜித்தின் குணத்தை பற்றி பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இளம் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் அஜித்தை தான் சந்தித்த தருணாத்தையும், அவரின் குணத்தை பற்றியும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் அஜித்தை தான் சந்தித்ததை பற்றி அவர் கூறுகையில்’ அஜித்தின் படத்தில் இசையமைக்க நான் மிகுந்த ஆர்வத்தில் உள்ளேன். அவரின் விவேகம் படத்திற்கு இசையமைக்க முதலில் என்னைத்தான் அணுகினார்கள், ஆனால் அது நடக்காமல் போய் விட்டது. அவரை நான் முதன் முதலில் காலா படத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் போது தான் சந்தித்தேன்.

santhosnarayanan

அவர் என்னிடம் நன்றாக தான் பேசினார்.ஆனால், என்னிடம் பேசும் போது ‘சாரி, நீங்க யாருன்னு இப்போ தான் தெரியும்’ என்று கூறினார். ஆனால்,நான் அவரிடம், ‘சார் என்னிடம் தெரிந்தவர் போல அன்பாக தான் பழகினீர்கள்’ என்று கூறினேன். அவரிடம் பொது இடங்களில் நீங்கள் பேசும் போது அனுமதி பெற்று பேசினால் நன்றாக பேசுவார். ஆனால் அதற்கு மாறாக நீங்கள் அவரை தொந்தரவு செய்தால் ‘நீங்கள் படித்தவர் தானே?உங்களுக்கு தெரியாதா. என்று பக்குவமாக கூறிவிடுவார்’ என்று தெரிவித்திருந்தார்.

Advertisement