யோவ், யாருய்யா நீங்க ? இந்தியா-நியூசிலாந்து இறுதிப் போட்டியில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்.

0
764
ajith
- Advertisement -

நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர். அதே போல சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

-விளம்பரம்-
Image

அவ்வளவு ஏன் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 14 தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். அந்த வீடியோவும் வைரலானது.இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தக்க நேரத்தில் வலிமை அப்டேட் வரும் என்று கூறினார் அஜித்.

இதையும் பாருங்க : 3 ஆம் வகுப்பிலேயே பெண்ணாக மாற முடிவெடுத்துள்ள ஷகீலா மகள் – காரணம் இந்த பையன் தானாம்.

- Advertisement -

அதே போல இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதும் சில காரணங்களை சொல்லி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தனர் வலிமை டீம். பூஜை போட்டு ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியும் அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் கடுப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Image

இப்படி ஒரு நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போதுஅஜித் ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் கேட்டு பதாகைகளை காண்பித்து இருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் தான் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement