பொன்னியின் செல்வன் மட்டுமல்ல sep.30 திரிஷா வாழ்வில் மிக முக்கியமான நாள் – 23 வருடத்திற்கு முன் இதே நாளில்

0
463
trisha
- Advertisement -

செப்டம்பர் 30 எப்போதும் திரிஷாவின் வாழ்க்கையில் ரொம்ப ஸ்பெஷலான நாளாம். அதற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதிலும்திரிஷா அவர்கள் சமீப காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால், நயன்தாரா அளவிற்கு லீட் கதாபாத்திரங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும் நயன்தாராவிற்கு இணையாக தமிழ் திரையுலகில் இன்றும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் இருந்து வருகிறார் திரிஷா.

- Advertisement -

திரிஷா திரைப்பயணம்:

தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருக்கிறார். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தின் மூலம் இளவரசியாக எல்லோரும் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார் திரிஷா.

-விளம்பரம்-

படம் விமர்சனம்:

இன்று இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த நாள் திரிஷாவின் வாழ்க்கையில் எப்போதுமே ஸ்பெஷலான நாளாக இருக்கு. ஆனால், பொன்னியின் செல்வன் படம் வெளியானது மட்டும் அவருக்கு ஸ்பெஷல் இல்லை. இன்னொரு ஸ்பெஷலும் இருக்கிறது.

திரிஷாவின் ஸ்பெஷல் நாள்:

அதாவது, திரிஷா திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு மாடலாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் மிஸ் சென்னை பட்டம் வாங்கியதன் மூலமாக தான் சினிமா உலகில் நுழைந்தார். 23 ஆண்டுக்கு முன் இதே நாளில் 1999 ஆம் ஆண்டு இதே செப்டம்பர் 30-ஆம் நாளில் தான் மிஸ் சென்னை பட்டம் பெற்றிருந்தார். ஆகவே, மிஸ் சென்னை பட்டம் வாங்கி பிரபலம் அடைந்த இன்று திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் படமும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ரசிகர்கள் பலரும் திரிஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து குந்தவி கதாபாத்திரத்தை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement