மெர்சலுக்கு ஆதரவாக களம் இறங்கிய அஜித் ரசிகர்கள்!

0
2156
Vijay - Ajith

இன்று தமிழ் திரையுலகில் இரு துருவங்களாக இருப்பது தலையும் தளபதியும் தான் .
mersalஇவர்களின் படங்கள் எப்போது துறைக்கு வந்தாலும் வசூல் சாதனை படிக்கும் என்பது தல மற்றும் தளபதி ரசிகர்களின் நம்பிக்கை.தளபதி விஜய் நடித்த மெர்சல் படம் பல்வேறு இடையூறுகளை கடந்து நேற்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

முதலில் மெர்சல் பட தலைப்புக்கு பிரச்சினை ஏற்பட்டது. அதன் பிறகு மத்திய-மாநில அரசுகளை தாக்கும் வசனங்கள் இருப்பதாக புகார் எழுந்தது. படத்தில் பறவைகள் இடம் பெற்றதற்காக விலங்குகள் நலவாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆட்சேப காட்சிகள் நீக்கப்பட்டு நேற்று முன்தினம் திரைக்கு வந்தது.

- Advertisement -

இதையும் படிங்க: மெர்சல் படக் காட்சிகளை நீக்கத் தேவையில்லை – பா.ரஞ்சித் அதிரடி
mersalதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள தளபதி விஜயின் மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி சம்மந்தப்பட்ட வசனங்களை நீக்க வேண்டுமே மத்திய அரசு படக்குழுவினரிடம் கூறி வந்தது அதை தொடர்ந்து படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்கினர்.

மத்திய அரசின் இந்த செயல்பாடுகளுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். தற்போது இது குறித்து மண்டல தணிக்கை குழு அதிகாரி மதியழகன் விளக்கம் அளித்துள்ளார்.
Ajith அரசியல் சார்த்த வசனங்களில் தவறு ஏதும் இல்லை. கருத்து உரிமை அடிப்படையிலேயே வசனங்கள் இடம் பெற்றுள்ளன, அதனால் தான் சென்சார் சான்றிதழ் அளித்தோம் என்று தணிக்கைகுழு பதில் அளித்துள்ளது.

-விளம்பரம்-

இதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளிடம்மும் இருந்து எதிர்ப்புகள் மெர்சல் படத்திற்கு வந்துள்ளதை தொடந்து விஜய் ரசிகர்கள் தங்களுக்கு இது மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்தனர்.தங்கள் பங்கிற்குஅஜித் ரசிகர்களும் மெர்சலுக்கு தங்கள் பெருத்த ஆதரவைதந்து வருகின்றனர்.

Advertisement