மெர்சல் படக் காட்சிகளை நீக்கத் தேவையில்லை – பா.ரஞ்சித் அதிரடி

0
963

இன்னும் வியப்பாக இருக்கிறது, விஜய் என்றாலே அம்மையார் ஜெ.ஜெயலலிதா, கருணாநிதி என அப்போதிலிருந்தே வரிந்து கட்டிக் கொண்டு எதிர்க்க வந்துவிடுவாரர். பட வெளியாக இரண்டு நாட்களே ஆகியுள்ள நிலையில் படத்தில் உள்ள அனைத்துக் காட்சிகளையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் பார்த்து அவரவர்கள்ளுக்கு ஏற்றார் போல், இது ‘காப்பி படம்’ ‘இது அரசியலுக்கு அடி போடும் படம்’ என விமர்சனத்தை வைத்து தங்காது காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக் கொள்கிறார்கள் ஒரு புறம்.

இன்னொரு க்ரூப் என்னவென்றால், இது எங்கள் கட்சியின் கொள்கை விளக்கங்கள், அவற்றை வெள்ளித் திரையில் கொண்டு மக்களிடம் சேர்த்ததற்கு நன்றி எனக் கூறிகொண்டு அவர்கள் ஒரு புறம் ‘நமக்கு நாமே’ செய்து கொண்டிருக்கிறனர்.
Ranjith தற்போதைய லேட்டெஸ்ட் பிரச்சனை என்னவென்றால், படத்தில் வந்த GST பற்றிய வசனங்கள் தமிழக பா.ஜ.க விற்கு பிடிக்கவில்லையாம். எப்படியோ படத்தைப் பார்த்துவிட்டு உடனடியாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அந்த காட்சிகளை நீக்க விட்டால் கேஸ் போடுவேன் எனக் கூறி படத்திற்கு பிரமோசன் தேடித் தந்தார்.

இந்த கமென்டுகல் பிரமோசனுக்கு உதவும் என்று பார்த்தால், இதனை பெரிய பிரச்சனையாக மாற்றி அதில் ஆதாய தேடத் துடிக்கிறது தமிழக பா.ஜ.க. ஆனால், அந்த காட்சிகளுக்கு ஏன் இந்த பதற்றம் என்று தெரியவில்லை. அந்த வசனங்களை பேசியது தவறா இல்லை பேசிய ஆல் தவறா எனபது பயந்து போய் கேஸ் போடுவேன் எனச் சொல்லியவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
ranjith
ஒன்றுமே இல்லாத பிரச்சனையை பெரிதாக்குவதற்கு என்றே ஒவ்வொரு கட்சியிலும் ஹெச். ராஜா ஹரிஹர சர்மா வைப் போண்று ஒருவரை வைத்திருப்பர். அந்த வேலையை செய்யத் துவங்கியுள்ளார் ராஜா சர்மா. அதுவும், அவருடைய வழக்கமான மத ரீதியான காழ்ப்புணர்ச்சியை இதிலும் காட்டியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீஆனை ஜெபாஸ்டியன் சைமன் என்று சொல்லியது இவர் தான், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை டேனியல் காந்தி எனக் கூறி அவர்களை கிறித்துவர்களா காட்டி மத ரீதியான தாக்குதலுக்கு துவக்கத்தை விளைவிப்பவரும் இவர் தான்.
mersalதற்போது விஜயைக் கண்டு பதற்றத்தில் ஜோசப் விஜய் எனக் கூறி நெட்டடிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார். தற்போது இந்த பிரச்சனையை தீர்க்க அழத்தது பொன்.ராதாகிருஷ்னனை. அவரிம் பேசிய பிறகு அந்த காட்சிகளை நீக்க முடிவெடுத்துள்ளாதாக தந்தி டீவி செய்தியில் சொல்லப்பட்டது.

தற்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயகுனே பா.ரஞ்சித் கூறியதாவது அந்த சம்மந்தப்பட்ட காட்சிகள் மக்களின் மனதில் இருந்து எதிரொளிப்பதாகவே இருக்கிறது அந்த காட்சிகளை நீக்கக்கூடாது என மெர்சல் படக்குழுவிற்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.