என்னது தல அஜித்தின் அடுத்த 58வது படம் வீரம்-2, அல்லது விவேகம் 2வா ? எது தெரியுமா !

0
1178
ajith - siva

வீரம், வேதாளம், விவேகம் என அடுத்தடுத்து 3 படங்கள் சிவாவுடன் பண்ணிவிட்டார் தல. தற்போது அவரது அடுத்த 58ஆவது படமும் சிவாவுடன் தான் என உறுதியாகியுள்ள நிலையில் அந்த படம் எப்படி இருக்கும் என அவரது ரசிகர்கள் யோசிக்கத் துவங்கிவிட்டனர்.
Ajithமேலும், ரசிகர்களில் பலர் சிவாவுடன் பிறகு நடிக்கலாம். தலயை வேறு விதமாக பார்க்க ஆசைப்படுவதாகவும் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். தற்போது அஜித்-சிவா கூட்டணியின் 4ஆவது படமும் முந்தைய படங்களைப் போலவே ‘V’ யில் தான் படத்தின் பெயரும் இருக்கும் எனவும் அறிவித்துவிட்டனர்.

ஆனால், இந்த படம் விவேகம்-2 அல்லது வீரம்-2 வாக இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ரசிகர்கள் விவேகம் படத்தின் பல காட்சிகள் பிடிக்கவில்லை எனவே விவேகம்-2 வாக இந்த படத்தை எடுக்க வேண்டாம் என கூறிவருகின்றனர்.

அதே போல், வீரம் அஜித் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட படமாகும். அதனால் பார்ட்-2 எடுப்பதாக இருந்தால், வீரம்-2 எடுத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் வீரம்-2வாக இருக்க வாய்ப்புகள் அதிகம் எனவும் பேசப்படுகிறது.