வெளியானது தல அஜித்தின் விஸ்வாசம் “First Look”…. செம மாஸ்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

0
306

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைத்துள்ள படம் ‘விசுவாசம்’. வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சில பல காரணங்களால் அடுத்து ஆண்டு பொங்களுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அடுத்த செப்டம்பர் மாதம் 13 தேதி, அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று தான் வெளியிடபோவதாக படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால்,இன்று (ஆகஸ்ட் 23) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இன்று அதிகாலை 3.40 மணிக்கு ‘விசுவாசம்’. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலேயே ட்விட்டரில் இந்திய அளவில் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் என்ற ஹேஷ் டேக்கை பேஸ்புக், ட்விட்டர் என ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள்

இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகி கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அந்த தகவல் ஊர்ஜிதமாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்குள்ளதால் ரசிகர்கள் குஷியாகி வருகின்றனர்.