என்னது விசுவாசம் படத்தில் 3 முன்னணி காமெடி நடிகரா ! யார் யார் தெரியுமா ?

0
1114
Viswasam movie

தல் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் சூட்டிங் இன்னும் ஆரம்பம் ஆகவில்லை. ஆனால் தீபாவளி ரிலீஸ் என கூறப்படுகிறது. தற்போது வரை முக்கியமான கேரக்டரில் நடிக்கும் நடிகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

robo-shankar

- Advertisement -

அஜித்துக்கு நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இசையமைக்க டி இமான் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும், தற்போது காமெடியனாக ரோபோ சங்கர் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.

ஏற்கனவே யோகி பாபு மற்றும் தம்பி ராமையா ஆகியோர் காமெடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் ரோபோ சங்கரும் படக்குழுவுடன் இணைவார் என தெரிகிறது.அப்படிப் பார்த்தால் விஸ்வாசம் படத்தில் காமெடியன்களோடு காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் படம் இருக்கும் என தெரிகிறது. படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவக்கத்தில் ஆரம்பம் ஆகவுள்ளது. இந்த படம் அஜித்-சிவா கூட்டணி தொடர்ந்து 4வது முறையாக இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement