அஜித்தின் விசுவாசம் போஸ்டர் வந்த 10 நிமிடத்தில் செய்த் சாதனை ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
9382
ajith

அஜித்-சிவா கூட்டணியில் உருவாகவுள்ள 4ஆவது படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தினை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும், படம் அடுத்த வருட (2018) தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
Ajithமுன்னர் வந்த மூன்று படங்களைப் போலவே இந்த படத்தின் தலைப்பும் ‘வி’யில் தான் இருக்கும் என்று முன்னர் சொல்லப்பட்டது போலவே அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இதையும் படிங்க: பில்லா ஸ்டைலில் கந்துவட்டி கும்பலுக்கு பதிலடி கொடுத்த அஜித் ! பயந்தோடிய கும்பல் ?

வழக்கமாக இது போன்ற அறிவிப்புகள் வரும் போது மாஸ் காட்டும் தல ரசிகர்கள் இந்த அறிவிப்பிற்கும் மாஸ் காட்டிவிடனர். விஸ்வாசம் என அறிவித்த 10 நிமிடத்தில் ட்விட்டர் தளத்தில் உலக அளவில் 4ஆவது இடத்தில் ட்ரெண்ட் ஆக வைத்துவிட்டனர் தல ரசிகர்கள்.

உலக அளவில் 4ஆவது இடமென்றால் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகும் அளவிற்கு படத்தின் தலைப்பை பிரபலப்படுத்திவிட்டனர் தல ரசிகர்கள்.

ajith அடுத்தடுத்து தொடர்ந்து விஸ்வாசம் தலைப்பை பல்வேறு தளங்களிலும் பிரபலப்படுத்த துவங்கிவிட்டனர். படம் தீபாவளி வெளியீடு என்பதால் தற்போதிலிருந்தே பட்டாசுகளைத் தெரிக்கவிடத்துவங்கிட்டனர் தல ரசிகர்கள்.