பில்லா ஸ்டைலில் கந்துவட்டி கும்பலுக்கு பதிலடி கொடுத்த அஜித் ! பயந்தோடிய கும்பல் ?

0
2125
ajith

தற்போதைய தமிழ் சினிமவில் கந்து வட்டிக் கொடுமை தலை விரித்து ஆடுகிறது என்று தான் கூற வேண்டும். கந்துவட்டி செய்யும் அந்த அன்புச்செழியன் கும்பலால் தற்போது சசிகுமாரின் மைத்துனர் மற்றும் இணைத் தயாரிப்பாளரான அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டார். இதே அன்புச்செழியன் கும்பல் தான் தல அஜித் குமாரையும் மிரட்டியுள்ளது.
ajith கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாலவின் இயக்கத்தில் வந்த நான் கடவுள் படத்தில் நடிக்க தலயிடம் தான் முதலில் பேசப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கால்ஷீட் கொடுத்த தல, இயக்குனர் பாலா கூறியபடி படத்திற்கான முடி மற்றும் தாடி உடம்பு என அனைத்தையும் செய்துவிட்டு கிட்டத்தட்ட கால்ஷீட் கொடுத்து 150 நாட்கள் கத்திருதிருக்கிறார் தல.

இதையும் படிங்க: கசிந்தது அஜித்தின் விசுவாசம் படத்தின் கதை மற்றும் படத்தின் இசையமைப்பாளர் பெயர் !

ஆனால், படத்தின் கதையை இறுதி வரை தலயிடம் பாலா கூறவில்லை. இதனால், அடுத்த படத்தில் கமிட் ஆகிவிட்டார் தல அஜித். மேலும், நான் கடவுள் படத்திற்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையும் திருப்பி கொடுக்கிறேன் எனவும் கூறியிருக்கிறார் தல. இதனையெல்லாம் கண்டுகொள்ளாமல், நான் கடவுள் படக்குழு அஜித்திற்கு பிரஷர் கொடுத்துள்ளது.
balaஇயக்குனர் பாலாவிற்கு அன்புச்செழியன் நெருக்கமானவர் எனவும் கூறப்படுகிறது. அப்போது தான் ஆட்டத்தில் வந்துள்ளது அன்புச்செழியன் க்ரூப். சம்மந்தப்பட்ட இடத்தில் வந்து அஜித்தை அந்த க்ரூப் மிரட்ட, தான் வைத்திருந்த துப்பாகியை எடுத்து ,’ இது லைசன்ஸ் உள்ள துப்பாக்கி, இதனை வைத்து தற்க்காப்பிற்க்காக சுட்டால் பிரச்சனை இருக்காது.’ எனக் கூறியுள்ளார் அஜித், இதனால் மிரண்டு போய் ஓட்டம் பிடித்துள்ளது அந்த அன்புச்செழியன் கும்பல்.