இதுல ஆல்யா மானஸா ஏன் வந்தாங்க ? – அடுத்தடுத்த திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா

0
292
- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியலில் ஆலியா மானசாவின் ரீ-என்ட்ரி குறித்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருப்பதால் சீரியல் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி ரோலில் நடித்த கண்மணி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள். இப்படி சீரியலில் முக்கிய ரோலில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. சீரியலில் தீவிரவாதிகள் இடம் இருந்து மக்களை பாரதியும், கண்ணம்மாவும் காப்பாற்றி விடுகிறார்கள். பாரதி கண்ணம்மாவினுடைய பழைய நினைவுகளை நினைத்து பார்க்கிறார்.

சீரியலின் கதை:

கண்ணம்மாவும் பாரதியை குறித்து நினைத்து பார்க்கிறார். எப்படியாவது இவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்ற முயற்சியில் பாரதியின் அம்மா, அப்பா, தம்பியும் இருக்கிறார்கள். அதோடு ஹேமா தன் தங்கை என்ற உண்மை லக்ஷ்மிக்கு தெரிய வருகிறது. இன்னொரு பக்கம், வெண்பா கர்பம் ஆகிறார். இவருடைய கர்ப்பத்திற்கு காரணம் ரோகித் தான் என்பது வெண்பாவிற்கு தெரியும். ஆனால், அந்த உண்மையை மறைத்து எப்படியாவது பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டுகிறார்.

-விளம்பரம்-

சீரியலின் டீவ்ட்ஸ்:

மேலும், பாரதி டி என் ஏ டெஸ்ட்டை எடுக்கிறார். ஹேமா, லட்சுமி தன்னுடைய குழந்தைகளா? என்பதை பரிசோதிக்க முயற்சிக்கிறார். அது மட்டும் இல்லாமல் டிஎன்ஏ டெஸ்டில் இரு குழந்தைகளும் தனக்கு பிறக்கவில்லை என்றால் வெண்பாவை கல்யாணம் செய்வதில் உறுதியாக இருக்கிறார் பாரதி. இன்னொரு பக்கம் ரோகித் ஒரு ஏமாற்றுக்காரன் என்பது வெண்பாவிற்கும், அவருடைய அம்மாவிற்கும் தெரிய வருகிறது. இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ஆலியா மானசாவின் ரீ-என்ட்ரி குறித்த புரோமோ வைரலாகி இருக்கிறது.

ஆலியா மானசா என்ட்ரி:

அதாவது, ஆலியா மானசா இந்த சீரியலில் ஹேமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் இறந்தது போல காண்பித்து இருந்தார்கள். குழந்தை ஹேமாவிடமும் பாரதி, ஆலியா மானசா தான் உன்னுடைய அம்மா என்று கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் ஆலியா மானசாவின் புகைப்படத்தை பார்த்து ஹேமா அதிர்ச்சியாகிறார். ஆலியா மானசா தன்னுடைய அம்மா இல்லை என்ற உண்மை ஹேமாவிற்கு தெரிய வருமா? பாரதி டிஎன்ஏ டெஸ்ட் என்ன ஆகும்? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement