பாட்டியை கூட விட்டு வைக்கவில்லை, மெளன ராகம் ரவீனா அரபிக் குத்து – வைரலாகும் வீடியோ.

0
853
raveena
- Advertisement -

தற்போது உலகம் முழுவதும் விஜய்யின் அரபிக்குத்து பாடல் தான் பயங்கர ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். விஜய்யின் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும், உலகம் முழுவதும் தற்போது விஜயின் அரபி குத்து பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே வாரத்தில் 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து 100 மில்லியன் பார்வையாளர்களை நெருங்க இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

ட்ரெண்டாகும் அரபிக்குத்து பாடல்:

கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என பட்டி தொட்டி எங்கும் அரபி குத்துபாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகை ரவீனா வித்யாசமாக அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா. இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படத்தில் நடித்து இருந்தார். இருந்தாலும் இவர் பிரபலம் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படத்தில் தான்.

ரவீனா நடித்த படங்கள்:

இந்த படத்தில் இவர் அம்மு அபிராமியின் பள்ளித் தோழியாக நடித்து இருந்தார். இப்படி இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து உள்ளார். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் பலவற்றிலும் கலந்து தன் திறமையை காண்பித்து வருகிறார். தற்போது ரவீனா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌன ராகம் 2’ என்ற தொடரில் நடித்து வருகிறார். முதல் சீசனை போல இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மௌன ராகம் 2 சீரியலில் நடிக்கும் ரவீனா:

இந்த தொடரில் சக்தி என்னும் கதாபாத்திரத்தில் ரவீனா நடித்து வருகிறார். பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, நடிகை ரவீனா அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி தான் நடத்தும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்கள் என ஏதாவது ஒன்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார். இதனால் இவரை சோஷியல் மீடியாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் படு பேமஸ் ஆகி வருகிறது.

வைரலாகும் ரவீனாவின் அரபி குத்து பாடல்:

அதுஎன்னவென்றால், நடிகை ரவீனா அவர்கள் அரபி குத்து பாடலுக்கு மௌன ராகம் சீரியலில் கார்த்தியின் அம்மாவாக நடிக்கும் பாட்டியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வயதிலும் பாட்டி அம்மா எனர்ஜியுடன் நடனம் ஆடி இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டி லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பாட்டியை ஆட வைத்த ரவினாவையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement